இயற்கை கொடுக்கும் ஒலிகள்

காற்றில் சலசலக்கும் இலைகள்
கடலில் பொங்கி வரும் அலைகள்
காலை பறவை எழும் பாட்டு
கன்னிப் பேச்சொலியின் மெட்டு

குழந்தை சத்தம் போட்ட சிரிப்பு
குயிலின் தனித்து வந்த பாட்டு
கோவில் எழுப்பும் மணி ஓசை
காதில் கேட்டிருக்க ஆசை

இரவில் இசை எழுப்பும் பூச்சி
இனிய குரல் கொடுக்கும் மாட்சி
இயற்கை அளிக்கும் இந்த சத்தம்
இனிமேல் கிடைக்க வேண்டும் நித்தம்

எழுதியவர் : நா.குமார் (28-Oct-12, 3:58 am)
சேர்த்தது : kavikumar09
பார்வை : 263

மேலே