வேலை
கடினமான உழைப்பாளி ஒருவர்
கடிகாரக்கடை வைத்திருந்தார்
நான்கு பேர் நடந்து செல்லும்
நடைபாதை ஒன்றின் ஓரத்திலே!
முக்கியமான பாகம் ஒன்றை
மும்மரமாகப் பொருத்துகையில்
பிழைப்பு கெட்ட ஒருவர் வந்தார் அவர்
போலீஸ் என்பதைத் தெரிந்து கொண்டேன்!
எடு!எடு!கடையை இல்லையென்றால்
எடுப்பேன் நானே கடையை என்றார்!
கடினமான உழைப்பாளியும்
கட்டளைக்குக் கீழ்படிந்தார்
அரைகுறையாய்க் காதில்விழும்
ஆங்கிலத்தில் திட்டியபடி
ஏதோ ஒன்றை எண்ணியே கேட்டேன்
என்ன படித்துள்ளீர் நீங்கள் என்று!
ஏக்கப் பெருமூச்சை வெளியிட்டபடி
எம்.சி.ஏ.என்றே அழுத்திச் சொன்னார் !