௧ல்லூரி (farewell day)

கல்லூரித் தாயின் கருவறையில்
பிறந்த நாம்
ஆண்டுகள் பல கழிந்ததால்
ஆயத்தமானோம் வாழ்கையை எதிர்கொள்ள...

பார்த்து பழகிய நினைவுகளை மனதில்
பதித்து
பாதித்த பலதை மறப்போம்...

நண்பனின் முகம் காண நாளும் வருவோம்
கல்லூரிக்கு...

தூரத்தில் இருந்தாலும் தூக்கத்தில் இருந்தாலும்
நம் நட்பு குறைந்ததில்லை...

" கஷ்டகாலங்களில் தோழ் கொடுத்த தோழா
இன்று பிரிவென்னும் துயரை நீயே
கொடுக்கிறாயே... "

ஒவ்வொரு நொடியும் இனிதாய் கழிந்ததே
இனி எப்படி கழிப்பேன் காலங்களை...

கனவுகளோடு வந்தோம் கல்லூரிக்கு
கல்வியோடு சேர்ந்து கற்றோம்
பாசம் , நட்பு என்னும் பாடத்தை...

தோல்வியின் இறுதிப்படி இது
இதுவே வெற்றியின் முதல்படி...

பிரிவு என்னும் முற்றுபுள்ளியை அகற்றி
நட்பு என்னும் தொடக்கபுள்ளியை உருவாக்குவோம்...

" பிரிவு என்பது புதிதல்ல
பிரிபவர்கள் தான் புதியவர்கள்... "

நேற்று வந்தோம் கனவுகளோடு ...
இன்று இருப்போம் புன்னகையோடு...
நாளை மலர்வோம் நினைவுகளோடு...

- கார்த்திகேயன். V

எழுதியவர் : கார்த்திகேயன்.V (30-Oct-12, 12:09 am)
பார்வை : 1572

மேலே