என் காதலுக்கு ஓர் இரங்கல்...

என் காதலின்
ஆழத்தை உரக்க கூறுகிறது!!
நீ பிரிந்த நாட்களில்....!!

உன் கனவுகளில்
நான் வலம் வந்த நாட்களை விட...
என் நினைவுகளில் நித்தம் நித்தம்
நிலாடுகிறாய்!!

என் நாட்காட்டியும் என்னை போல்
தினம் தினம் தேய்கிறது...
உன் வருகை காண!!

என் தொலைபேசி கூட
இன்று தொல்லைபேசியாய்
மற்றவர் அழைப்பினில்...

காலசுவடுகளில் என் காதல்
கறையான் உண்ட எஞ்சங்களோ
அல்லது
என் இதய கூட்டின் இன்ப ஓட்டடைகளோ !!

இன்று என் கண்களில் வருவது
நீர் அல்ல!!
என் காதலின் கனவுகள்...

இதோ உன் நினைவுகளுடன்
உலவும் ஓர் தேய்பிறை நிலா!!

எழுதியவர் : தேவி கோ (30-Oct-12, 7:40 pm)
சேர்த்தது : Devi G
பார்வை : 261

மேலே