பணம் என்னடா பணம் அதை பிணம் தான் தின்னும்!
ஆம், இது உண்மை என் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவம்!
எனது பேஜர் சுபி , சிங்கம் எனும் பெயர்கொண்ட என் தந்தை கௌரி எனும் பேஜர் கொண்ட என் அன்னை
இவர்களின் மூத்த புத்திரி இந்த சுபி
இவள் வாழ்கையே சிறு வயதில் இருந்து சோகம் தான்
அது ஒரு பக்கம் இருக்க இவள் இந்த பணத்தின் மேல் கொண்ட வெறுப்பிற்கு காரணம்
மிகவும் வறுமையில் வாழ்ந்தாலும் சுகமும் சந்தோசமும் கொண்ட வாழ்கை - அது
என் அன்னை உள்ளவரை வாழ்ந்த வாழ்கை
கஞ்சி குடித்தாலும் கௌரவமாக வாழ்ந்தவர்
எங்களையும் வாழ வைத்தவர் என் அன்னை
ஆம் தன் உடலை வருத்தி கஷ்ட பட்டு
தன் கடைசி முச்சு உள்ளவரை உழைத்தவர்
இலங்கை எமது தாய் நாடு பிறந்த நாட்டில் வாழ
முடியவில்லை அதலால் இடம் பெயர்ந்தோம்
இலங்கை விட்டு இந்தியாவே தஞ்சம்
சிவகாசி நான் பெயர்ந்த இடம் இவர்கள் ஆதரவே
எமது தஞ்சம் அமாம்
வெடி தொழில் சாலை இதுதான் என் தந்தைஜின்
பிழைப்பு , ஒரு நாள் சம்பளம் ஒரு வேளை உணவு
ஒருவேளை ஓய்வு ஒருநாள் பட்டினி
இப்படி இருக்க உடல் முழுதும் நோய் கொண்ட என் அன்னை என்ன செய்வார் பாவம்
ஆறு நாள் வேலை ஒரு நாள் ஓய்வு அதை கூட எடுக்க மனம் இல்லை
லாட்டரி இது தான் அவர் தைரியம் நாஜிர்று கிழமை அனால் டிக்கெட் விற்க போய்விடுவர்
அதில் கிடைக்கும் பணம் அன்று எங்களுக்கு கொண்டட்டம்
கஷ்ட பட்டு உழைக்கும் போது வராத இந்த பணம்
வந்தது என்று தெரிசுமா?
கலை பொங்கல் கொண்டாட்ட தினம்
மாலை நான் கண்டது என் அன்னைஜின் பிணம்
மறுநாள் வந்தது பணம் லட்டோரி அதிஸ்டம்
என் அன்னைஜின் துரதிஸ்டம்
இன்று நான் பணம் தழுவாத நாள் இல்லை
ஆனால் தினமும் போராட்டம் இந்த பணத்தால்
என் நின்மதியான வாழ்வை தர முடியவில்லை
அன்னையுடன் போனது எனது சந்தோசம் நின்மதி
பாசம் எல்லாமே புலம்புகிறேன் இன்று இந்த பேதை
பாசத்திற்காக ஏங்கும் இந்த பேழை !