இந்திய மழையும் இன்பம்

கொட்டும் மழையில்
குடை இல்லாமல் நடந்து
ரோட்டில் ஓடும் ஆற்றைக் கடந்து
வீட்டை அடைந்தபின்
இடியை ரசித்து
துண்டில் துடைத்து
தூணில் சாய்ந்து
சுடச் சுட பஜ்ஜி
சூடான காப்பி
கம்பளி சுருட்டி
கட்டிலில் படுத்து
ராஜா பாட்டை
ரேடியோல கேட்டு
ரசிச்சா ஏது
ராகு காலம்!

எழுதியவர் : நா.குமார் (31-Oct-12, 4:18 am)
பார்வை : 162

மேலே