சிறகடித்து பறந்த அன்பு மகனுக்கு

"ஈ" மெயிலில் முழ்கி
கம்பியூட்டரே உலகமென
பறந்து சென்றுவிட்ட
என் பாசப்பறவையே...... !

என்
கண்ணின் கருவிழியே
கொஞ்சம் திரும்பிப்பார்.........!

வேர்கள் இங்கு
வேதனையில் கருகித்துடிக்கின்றன.....!

உன்னை
மடி சுமந்த தாய்மை
உன் நினைவுகளை
மட்டுமே சுமந்து தவிக்கிறது
நீயோ
மடி கணனியே உலகமென
அதனை மடியில் சுமந்து மகிழ்கிறாய் ....!

கூகுள் மேபிள்
உன் கிராமத்தையும்
கொஞ்சம் தேடிப்பார்
மேக மூட்டமாய்
உன் தாயின் மூச்சு காற்றில்
உன் பெயர் எதிரொலிக்கும் .....!

பத்து மாதம் சுமந்த
கற்பப்பைக்கு ..நீ
அனுப்பும் பணத்தோடு
கொஞ்சம் பாசத்தையும் சேர்த்தனுப்பு.....!

பாலுட்டி
மகிழ்ந்த மார்பகங்கள்
வேதனை தீயில் கருகித்துடிக்கின்றன
மடிக்கணனிக்குள்
வலைதளங்களில் தேடிப்பார்
மருந்துகள் கிடைக்கிறதாவென....!

இமைக்குள் கண்களாய்
உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
இந்த தாய்மை காத்திருக்கிறது

இமைகள் மூடுமுன்
ஈ மெயிலில் இருந்து விலகி
என்னை கொஞ்சம்
ஏரேடுத்து பார்
உன் பாச பார்வையால்
மோட்சம் அடையட்டும் இந்த தாய்மை ...!

எழுதியவர் : வெற்றிநாயகன் (2-Nov-12, 9:31 pm)
பார்வை : 376

மேலே