அவள் அப்படித்தான்,,,,

அவள் அப்படித்தான்,,,,

இரவு முழுக்க என் நினைவை பிழிந்தும் விடைகிடைக்க ஏன் தாமதம்,,,நீ யார்,,??

உந்தன் விம்பங்கள் வெட்டும் இந்த சம்பவக்கூறுகள் எந்தன் உயிரினை பறிக்கும் ஒரு உத்தேச போர்க்களமா,,,??

என் உயிரோட்டமத்தில்,,,,உன் ஒரு உறவு போராட்டம்,,,உரிமையாய் அதில் நீ ஆட்கொண்டு கொய்யும்,,,உன் இறுதி குறிக்கோள்தான் என்னடி,,,,???

திசை காட்டி அதன் முள்ளை இழந்து நிற்கும் யாருமில்லா ஒரு நீர்மூழ்கி கப்பலை போல் விசாலமாய் கிடக்கிறது என் அகம்,,,,இதில் வாழ்க்கை வெளிச்சம் காட்டும் கலங்கரை விளக்கம் ஒரு கேள்விக்குறியாய் இருந்தும் தொடரும் என் பயணம் நீந்துகிறேன் நிறைவில்லாத எண்ணங்களோடு நான்,,,,,

வழக்குகள் நிறைந்த நீதிமன்றம்,,இவ்வையகம்,,,
இதிலோர் வாழ்க்கை என்னும் வேடிக்கை மேடை,,,,கயிற்றில்,,,தொங்கிய திரைகள் எனப்படும் விதியால் தீர்மானிக்கப்பட்ட அடுத்தக்கட்டம் அதை அறிந்தால் நிம்மதியில்லை அறியாமலிருந்தால் உறக்கமில்லை,,,உன் நினைவுகளும் இன்றொரு விடுகதை சொப்பனமாய் இதில் நான் சிரிக்கவா,,
இல்லை ,,,சீற்குலைந்துவிடவா ,,,??,,என் நினைவுகளில் அரங்கேறிய,,,,கனவு தேவதையே,,,,உன் ஆசைகளின் அஸ்தமனம் இதில் எப்பொழுது,,,

உயிரற்று கிடக்கும் என் ஆறடி அங்கம் உன் படுக்கையறை முகம் பார்க்கும் கண்ணாடியின் பிரதிபலிப்பு,,,,உன்னுள் உயிராய் இருக்கும் என்னை உன்னில் உணர்த்தவேதான் இந்த உணர்வு போருக்கு நான் ஆயத்தமாகிறேன்,,, நீயதை புரியாமல் போனாலும்,,மண்ணோடு மண்ணாய் போகிறேன்,,,,உன் மார்பில் சாயும்
காதலனாய் இவனில்லைஎன்றாலும் ,,,என் நேசம்,,என்றும் ஒரு சகாப்தமே,,,,

விழிகளால் உன்னை பார்க்கவும் இல்லை,,
விரல்களால் உன்னை தீண்டவும் இல்லை,,,
உணர்வுகளால் உன்னோடு பேசியது
மட்டுமே உண்மை,,,,இதில் விதிக்கு மட்டும்,,
ஏனடி பெண்ணே என்மேல் ஒரு கோபம்,,,

நான் பார்வை சூரியன்,,சுட்டெரிக்க
ஆசைதான்,,,உன் சூட்சம,,தந்திரத்தில்
பகடையாய் என்னை பயன் படுத்திய
விதியென்னும் அந்த மாயாவியை,,,,,,
இருந்தும் தயங்குகிறேன்,,,இந்த
விளையாட்டு காலத்தில் உன்
வாழ்க்கை,,,உன் ஆசைகள்,,
அடங்கியதை நினைக்கையில்,,,

பல கேள்விகள்,,,பலரிடமிருந்து நான்
ஏன் அவளை நேசிக்கவேண்டும் என்று,,
அந்த பலருக்கும் விடை இதுமட்டும்தான்,,,,,

ஆம்,,,,“அவள் அப்படித்தான்,,,”

ஆகையால்தான் அவளை நேசிக்கும்
படி செய்துவிட்டாள்,,,, என்னை

என் விழிகள் மூடும் ஒருநொடி முன்னே,,
உன்சிறு புன்னகை என்னில் வேண்டும் பெண்ணே,,

அனுசரன்,,,,,,

எழுதியவர் : அனுசரன் (2-Nov-12, 10:09 pm)
பார்வை : 207

மேலே