என் சோகத்தின் அர்த்தம்...!

குருதி வடிந்த தெருக்கள்
கந்தப்புகை சுவாசித்த மரங்கள்
கொத்துக்குண்டுகளைத்தாங்கிய குடிமனைகள் ,
வெடித்த குண்டால்
உடல் பிளந்திட்ட மண் மேடுகள் - நாம்
இன்றளவும் அழுகிறோம் ....!
மூன்றாண்டுகள் தான் கடந்திருக்கு...!
வீரத்தோடு வாழ்ந்த அன்றைய தமிழன்
எங்கே???
கோழையாகி மாற்றானுடன் கூத்தடிக்கும்
இன்றைய இளைஞன் எங்கே???
ஆடைக்குறைப்போடு
கேளிக்கை கூத்தடிக்கும்
இன்றைய யுவதி எங்கே???
எப்படி மாறினீர்கள் ....???
எப்படி மறந்தீர்கள்.... ???
மூச்சுவிடக்கூட நேரமில்லா இடப்பெயர்வுகள்
கணப்பொழுதில் ஓராயிரம் சாவுகள்...!
கண்ணீர் வற்றிய அழுகையின் ஓலங்கள்
அள்ளிப்புதைக்கக்கூட முடியாத பிணக்குவியல்கள்
சன்னச்சிதறலில் துடிதுடித்த எம் உறவுகள்
சாவுக்குள் வாழ்வைத்தொலைத்த
எம் சொந்தங்கள்...
முகவரியில்லா எம் உடன்பிறப்புக்கள்....
இத்தனையும் எப்படி வந்தது???
உயிருள்ள இளைஞனே , யுவதியே
என் சோகத்தின் அர்த்தம் புரிகிறதா.........???
உன்னை உனக்குப்புரிகிறதா.....???

எழுதியவர் : அ.ஸ்வின்டன் (2-Nov-12, 10:20 pm)
பார்வை : 202

மேலே