அடைந்தே தீருவோம் தமிழீலத்தை

தன்னை பெற்றவர்களை இழந்து
தான் பெற்றவர்களையும் இழந்து

உடன்பிறந்தவர்களை இழந்து
உற்றார் உறவினர்களையும் இழந்து

உழைத்து சம்பாதித்ததை இழந்து
உண்டுவாழ்ந்த இடத்தையும் இழந்து

உறங்கியெழுந்த வீட்டை இழந்து
உடலுறுப்புகளையும் இழந்து

உயிரினுமேலான மானத்தை இழந்து
உயிருள்ளவரை காக்கும் மரியாதயையும் இழந்து

இப்படி எத்தனை எத்தனை இழப்புகள்
எண்ணிலடங்கா துயரங்கள்

இருந்தும் இழக்கதுனியோம் ஈலத்தை
அடைந்தே தீருவோம் தமிழீலத்தை

எழுதியவர் : மும்பை ப.ராஜா (3-Nov-12, 12:03 am)
பார்வை : 152

மேலே