{{{ காலத்தின் கோலங்கள் )))

மார்பினில் உறங்கும் சிறுவனும்
மது போதைக்குமயங்கும் காலமின்று - சில
மங்கையர் செயல்களால் கலாச்சாரம்
மக்கிய குப்பையாய் போனதின்று..

தொடைதெரிய உடையணியும் பெண்கள்
நடை பாதையில் நாளும் திரிவதனால்
நாகரீகம் நாசமாய் போனதென்று
நாணி நின்றதே நாடுமின்று....

மார்பை மறைக்கும் மாராப்பின்
மாண்பு மறந்து போனதனால்
மாற்றம் என்று நினைத்துநிதம்
நாற்றம் கொண்டது மனிதரினம்....

காதல் என்ற பெயரில் இங்கு
காமம் தீர்க்கும் சில பலரால்
காதலுக்கும் பிடிக்கவில்லை
காதல் என்ற தன் பெயரை ........

சாதி மதம் பிறந்ததனால்
சாக்கடையாய் மனிதயினம் !
சட்டங்கள் இயற்றவேண்டும்
சாதி மதம் இல்லையென்று ..........

கடவுளே சற்று கண்திறந்து பார்
கண்ணிழந்த நம் கலாச்சாரத்தை !
கடவுளென்ற நினைப்பகன்று
கல்லறையே நீ சுகமென்பாய்....

எழுதியவர் : ராஜ்கமல் (5-Nov-12, 3:45 pm)
பார்வை : 272

மேலே