தோழனாக வர போகும் என் கணவனே

தோழனாக வர போகும் என் கணவனே ...
எத்தனையோ ஆசைகள் என்னுள்!!

இதுவரை
காதலிக்கவில்லை யாரையும் !!!
அத்தனை காதலையும் தேக்கி வைத்திருக்கிறேன்
உன்னிடம் கொட்ட..

உன் தோழியாய் உன் பாதியாய்
உன்னோடு உன் கண்ணோடு வாழ வேண்டும்...

யாருக்குமே தெரியாத என் பல ரகசியங்களை உன்னோடு உன் காதோடு
பகிர்ந்து கொள்ள வேண்டும்...

கொட்டும் மழையில் ஒரே குடையில் உன்னோடு உன் தோள் உரசி நடக்க வேண்டும்...

உனக்காக சமைத்து அதை ஒரே தட்டில் சேர்ந்து உண்ண வேண்டும்..

உன் கை பிடித்து நடை பயில வேண்டும் மீண்டும் ஒரு குழந்தையாகி ...

உன்னோடு உன் மடி சாய்ந்து பல நீண்ட பயணம் வேண்டும் ...

உன் பெற்றோரின் மருமகளாக இன்றி மகளாக உன் வீட்டில் உனக்காக வாழ வேண்டும்...

என்னை மாற்றி கொள்ள வேண்டும் உனக்காக
உனக்கு பிடித்தது போல ...

சில நேரம் சண்டை ,அதற்க்காக பல நேரம் கொஞ்சல் சமாதானம் வேண்டும்...

இன்னும் பல ஆசைகள் இருக்கிறது என்னுள் உன்னை காண போகும் நாட்களை எண்ணி எண்ணி...

என்னவனே எங்கு இருக்கிறாய் ???

எழுதியவர் : தேவிப்ரியா சுந்தரம் (8-Nov-12, 12:27 am)
பார்வை : 265

மேலே