எனக்குப் பிறந்த நாள்.......

எனக்குப் பிற்ந்த நாள்
பிறந்ததிலிருந்தே அழும் நாள்
எவ்வித அதிசயமும் நடக்கா நாள்
பிச்சைப் பாத்திரத்துடனே தொடரும்
என் வாழ் நாள்.....

அவரவர் மட்டும் கொண்டாடும் திருநாள்
பரிசுகளும்,வாழ்த்துக்களும்
எக்கச்சக்கமாய் பெருகும் நாள்
எனக்கும் என்றுதான் பிறந்தநாள்
தொடுப்பேன் கேள்விகள் அடிக்கடி நான்

எவர்தான் வாழ்த்துவார் என்று
ஏங்கியிருக்கிறேன் பல நாள்
ஏச்சுக்கள் பேச்சுக்கள் வாங்கியே
நடக்கிறேன் தின்மும் நான்..............

எத்தனை போஸ்டர் காண்கிறேன் -வீதியில்
ஏன் இந்தப் பிறவியென்று கடவுளை
நொந்து கொள்கிறேன் -மனதில்

பிரசவித்தவள் இருந்திருந்தால்
பிறந்த நாள் இது என்பாள்
பிள்ளைப் பேற்றால் பிரசவித்தவள்
பிறந்த நாள் அன்று இறந்தே போனாள்.........

அன்றிலிருந்து தெருச் சிறுவன் நான்
அம்மா அப்பா முகம் காண அப்பாவி நான்
பிஞ்சு வயசிலிருந்தே அறியாப் பிறந்த நாள்
பிள்ளைக் குறும்புகளோடு தேடுகிறேன்
எனக்குப் பிறந்தநாள்...............

மலர்ந்த நாள் எனக்குப் பிறந்தநாள் என்று மலர்களாவது சொல்லும் வரை -நான்
மனக் கணக்குப் போட்டு நாள்,
மணி நேரம் காத்துக் கிடக்கிறேன் -நான்
எனக்குப் பிறந்த நாள் பிறக்கும்- என்பதால்............

கூம்புத் தொப்பியுடன் ஓர் நாள்
கூட்டளிகளிடையே ஹீரோவாய் -நான்
கேக் வெட்டிக் கொண்டாடுவேன் -பிறந்த நாள்
கொள்ளைக் கொள்ளை ஆசைகளோடு
எனக்குப் பிறந்த நாள்

அப்பப்போ அஞ்சுக்கும் பத்துக்கும்
கையேந்தும் நாள்
அன்பான யாரேனும்
கைகுலுக்கி வாழ்த்துவாரோ
எனக்குப் பிறந்த நாள்

கேட்கவும் நாதியில்லா நான்
கேக் வெட்டிக் கொண்டாடும் பிறந்த நாள்
மண்ணாசையாகிப் போயிடுமோ-என் பிறந்தநாள்
எப்போது என்று தெரியா அந்நாள்
எனக்கே தெரியாத போது எப்படிக் கொண்டாடுவேன் எனக்குப் பிறந்த நாள்...................

பிச்சைக் கேட்டுப் பழகிய நான்
பிறந்த நாள் வாழ்த்தையும் கேட்கிறேன்
வாழ்த்திவிட்டுப் போங்களேன் -ஓர்நாள்
ஆவலோடு பார்த்திருக்கிறேன்
எனக்குப் பிறந்த நாள்.............

எழுதியவர் : MIZHIMA (COLOMBO) (8-Nov-12, 3:34 am)
பார்வை : 184

மேலே