"த" கர வரிசையில் வேண்டும்
வேண்டும்.! வேண்டும்!!
தீச்சொல் தீண்டாத நாவு
தீமைகள் அண்டாத வாழ்வு
தீயகம் தொடாத தேகம்
தீரம் திரட்டிய செயல்
தீர்க்கம் நிறைந்த அறிவு
தீப்பிழம்பாய் சிந்தனைகள்
தினவெடுத்த தோள்கள்
திண்ணமான நம்பிக்கை
திமிரெடுத்த தியாகம்
திவ்வியமான ஞானம்
தினகரன் போல அறிவொளி
திக்கெட்டும் பரந்த புகழ்
தரும எண்ணங்கள் தழைக்க
தரணியெல்லாம் செழிக்க
தன்னலம் அற்ற தன்மை
தணல் போன்ற தன்மானம்
தலைக்கனம் இல்லா திறமை
தலைக் கவசமாய் தானம்
தாழ்மை நிலையிலும் தன்முனைப்பு
தகை மேன்மையிலும் தன்னடக்கம்
தண்டலர் வெல்லும் சூரம்
தக்க சமயத்தில் உதவும் நண்பர்கள்
தாய்தந்தையை மதிக்கும் மதிநுட்பம்
தராதரம் பாராத உறவினர்கள்
தனச் செறுக்கில் ஆடாத நிலை
தாயகம் நேசிக்கும் தேசப் பற்று
தாய்மொழி தமிழை நன்று கற்க
தம்பிரானுக்கே தலை வணங்கும் தலை