மாண்ட காதலும் மீண்ட காதலும்

சிறைப்படுத்துவது மட்டுமல்ல காதல்
சிதைக்க வைப்பதும் காதல்
சிதிலத்திலிருந்து மீண்டால்
சிந்திக்க வைப்பதும் காதல்தான்
அந்தி கிழிந்த நேரத்தில் அவளை
ஆவலாய் எதிர்நோக்கு வார்கள்.....
காதல் புதிதுமல்ல - புதிருமல்ல
காதல் என்பது ஒரு காடு
காடு நமக்குக்
கற்றுத் தந்தது ஏராளம்
காடழிந்தால் - மனித
வாழ்க்கையே அழிந்துவிடும்
காதல் அழிந்தால்
தாபத்தால் ஒரு மனிதன் அழிகிறான்....
வாழ்வதற்கு வரைமுறை யுண்டு
காதலுக்கும் வரைமுறை தேவை
தோற்றுப் போகாமல் காதல் செய்யுங்கள்
சபலப் படாதீர்கள் - அதிகமானால்
சாம்பலாவீர்கள் ...
தோற்றாலும் மனத்தைத்
தேற்றிக் கொள்ளுங்கள் - எப்படிக்
காதலில்லாமல் வாழ்வதென்று!
பெண்ணை மட்டும்
காதலிக்காதீர்கள் - உன்
சுற்றம்- உடன் பிறப்புகள்
ஈன்றெடுத்த பெற்றோர்
அழிந்து வரும் காடு
பெரிதாகிக்கொண்டே வரும்
ஓசோன் ஓட்டை
மாண்டு வரும் மனித நேயம்
பூண்டு வரும் தோழமை
காதலியுங்கள் - ஐயப்படாமல்
கண்ணால் கண்டதையெல்லாம்.....
மாண்ட காதலும்
மீண்ட காதலும் வாழ்க!

எழுதியவர் : இராசபாரதி (8-Nov-12, 11:13 am)
பார்வை : 123

மேலே