மாற்றம்

காலத்துக்கு ஏற்றமாற்றம்
ஏற்படுத்துமே ஏற்றம்
கையில் கரண்டி நெஞ்சில் பிள்ளை
என்ற நிலை மாறி
கையில் கணினி
நெஞ்சில் முன்னேற்றத்தின் திட்டம்
பெண்ணே துணிவே துணையாகும்
நிலவுக்கு போய்வர வழி பிறக்கும்
வான மண்டலத்தில் குடியேற திட்டம் தீட்டும்
நீ அடுப்பங்கரை என்று இருந்தது அன்று
ஆணுக்கு பெண் நிகர் என்றிருப்பது இன்று
உணவுக்காக விவசாயம் செய்த நிலை மர்றி
மண்ணை விட்டு வின்னிலே குடியேரி
உணவு இல்லாமல் வாழ வழிபிறக்கும்
பருக நீரும் சுவாச காற்றும் தேவை இல்லை
வின்னகத்தை பொன் நகரம் ஆக்கிடலாம்
வான வீதியில் பறந்திடலாம்
காலத்துக்கேற்ப மாற்றம்
தந்திடும் ஏற்றம்

-கோவை உதயன்

எழுதியவர் : udayakumar (8-Nov-12, 3:24 pm)
சேர்த்தது : UDAYAKUMAR.v
Tanglish : maatram
பார்வை : 204

மேலே