இசை மீட்டா வீணை நான் ...மலடியாய்.,,,,,,,,,இன்போ.அம்பிகா

இசை மீட்டா வீணை நான் ...மலடியாய்.....இன்போ.அம்பிகா
***************************************************************************
கொள்ளையின்பம் குலவு கவிதை
சொல்லும் புலவர் இங்கிருந்தீர்.....
எச்சமாய் நான் மட்டுமே
மிச்சமாய் நின்றிருந்தேன்....அங்கு....

இசை மீட்டா வீணை நான் ...
என்னை மீட்டாமல் வீணாக்கினான்
விதியென்றான் வீணன் அவன்......
ஆனந்தபைரவி இசைக்கும் முகாரி நான் .....

மீட்டும் போதும் சிரிக்க வேண்டும் ....
மிதிக்கும் போதும் பொறுக்க வேண்டும் ...
மேனிதனில் தழும்புகளின் வலிகள் ....
கூனிக்குறுகி மனதில் வீணையின் அலறல்....

அடிமைப்பெண் நான் வீணை போல் -அதிர்வுகளை
சகித்தும் அடக்கமாய் இசைத்தல் வேண்டும்
இசை மீட்டா வீணை நான் ...என் தந்துகிகள்
நாதமற்ற கம்பிகளாய் ....நானிலத்தில்

அட்டை உறவுகள் என்னை அறுத்து
சதை தின்ன வார்த்தைகளால் அதையும்
பொறுத்து அழகாய் சிரித்தல் வேண்டும்
அதிசய விதி அமைந்தது எனக்கு -

என்னை புழக்கடையில் போட்டு
புண்ணாக்கினான் ...அந்த புண்ணாக்கு மனிதன்...
ஆவேசப் பட்டால் நீ பெண்ணல்ல என்பான்
பச்சை மகவீனா பசு நீ என்பான் அவன் ....

அவன் அம்மா அடுத்த பந்தலில்
அணங்கொன்றை சொந்தமாக்கென்றாள்...
அய்யகோ என் கதை கேளீர் ....
எனக்கான முடிவொன்றை சொல்வீர்...


இன்போ.அம்பிகா


.

எழுதியவர் : info.ambiga (8-Nov-12, 1:30 pm)
பார்வை : 191

மேலே