ஒபாமாவும் உப்புமாவும்!
ஒபாமா வெற்றி கூட
நம்மால் கொண்டாடப்படும்
அடிமைத் தனத்தை
என்னென்று சொல்வேன் தோழி!
அவர் ஜெயித்தால்
தட்டில்
பிச்சை அதிகம் விழும்!
இவர் ஜெயித்தால்
தட்டே விழும்!
தட்டேந்தி நிற்க்கும்
நம் நிலையை
என்னென்று சொல்வேன் தோழி!
பரிணாம வளர்ச்சியில்
முதுகெலும்பு இல்லாமல்
முளைத்தை முதல் உயிரினம்
நாம் என்பதை
என்னென்று சொல்வேன் தோழி!
அடுத்த வேலை
உணவுக்கு உழைப்பவனுக்கு
ஒபாமாவும்
உப்புமாவும் ஒன்றே என் தோழி!