இறைவன்

இறைவனே தன்னைப் பிளந்து ஆண்பாதி பெண்பாதி என்று ஏற்படுத்தியிருக்கின்றார். அதனின் பாதிப்பு எல்லா உயிர்களிலும் இருந்துகொண்டுதான் இருக்கும். பெண்ணாய் இருப்பின் ஆண்.
ஆணாயிருப்பின் பெண்ணின் அன்பு, பெண்ணின் தோழமை, பெண்ணின் அரவணைப்பு, பெண்ணின் பொய்க்கோபம், பெண்ணின் ஆணவம், பெண்ணின் அதிகாரம், பெண்ணின் அழகுகள், பெண்ணின் பொறாமைகள், பெண்ணின் தாய்மை, பெண்ணின் தூய்மை, பெண்ணே ஒரு தெய்வம்தான். பெண்ணை நட்பாக நினைப்பின் அதுதான் உலகம். இருவரில் யார் பெரியவர் என்னும் சிந்தனை தலை தூக்கிவிடின் அதுதான் கொடுமை.பெண் ஒரு சக்தி, பெண்ணின்மூலமே தெய்வத்தினை தரிசிக்க இயலும்.

எழுதியவர் : தீ (11-Nov-12, 3:49 pm)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 308

மேலே