அய்யய்யோ கலப்படம்......!

பேஸ் புக்கில் ஹீரோ படம்
பேசிப் பாத்தா தாத்தா குரல்
அய்யய்யோ கலப்படம்......!
பெண் பார்க்கையில் பதினெட்டு
முதலிரவில் எண்பத்தெட்டு
அய்யய்யோ கலப்படம்.......!
உண்மை எது பொய் எது
ஒண்ணுமே புரியலே
அய்யய்யோ கலப்படம்......!
என்னை நானே கிள்ளிப் பார்த்தேன்
சிலிக்கான் சதைகள் மறத்துப் போக
அய்யய்யோ கலப்படம்......!
கும்முன்னு இருக்குன்னு
கொஞ்சி கொஞ்சி போகாதே......
கலப்படம் புரியாமே
கட்ட மண்ணா போகாதே
கண்ணை நம்பாதே உன்னை ஏமாத்தும்
நீ காணும் தோற்றம் - உண்மை இல்லாதது
கண்ணதாசன் வரியிலே
கருத்த நீ புரிஞ்சிக்கோ
கட்டுடலே கண்ணால் பாத்து
கண்ணுங்களா ஏமாறாதீங்க
செத்த சதை தொங்கும் இறைச்சிக் கடை
சிவந்து குலுங்கும் கவர்ச்சி செயற்கை......!