தாழிட்ட குற்றம்

ஒற்றை சுவர் கிடையாது
மறைப்புக்கு திரை கிடையாது
அணிந்திருப்பதோ அரை அடி துணி
தேகங்கள் உரசும் காட்சிகள் இனி

கட் கட் உண்டு
ரீடேக் உண்டு
வாடிக்கையாளர்கள் இல்லை
பல வேடிக்கையலர்களோ தொல்லை

துண்டு காட்சிகள் ஒட்டப்படுகிறது
கோடிகணக்கில் பேரம் ஆகிறது
கூட்டங்கள் கூடுகிறது ஆயிரக்கணக்கில்
திரையிடப்படுவதோ திரையரங்குகளில்
சிலர் உரசல் காட்சிகள் உள்ளத்தில் குளறுபடி
குளறுப்பட்ட குமரனோ இச்சையின் இம்சையில்
இச்சையை அகற்றிட
இன்றும் இருக்கிறது இருட்டுத்தொழில்

நான்கு சுவர்கள் உண்டு
தாழிட்ட கதவு உண்டு
இருவர் மட்டுமே ஒரு தருணத்தில்
வாடிக்கையாளர்கள் உண்டு
வேடிக்கையளர்கள் இல்லை
போலிசும் வருவர்
ஒன்று பணம் வாங்க
இல்லையெனில் பிடித்துச்செல்ல

அரை அடி ரீடேக்குக்கோ
அரை கோடி சம்பளம்
தாழிட்ட குற்றத்துக்கு
எனக்கு சிறை கம்பளம்

எழுதியவர் : ராஜ் நாராயணன் (13-Nov-12, 1:01 pm)
பார்வை : 177

மேலே