உடைந்து போகும் கனவுகள்

கனவுகள்
காலங்கள் பல சென்றும்
கலையாத நிலவுகள் - அவை

நிறையாத ஜாடியை
நிறைய வைக்கப் போராடும் ஓர்
நிறமுள்ள தண்ணீர் - அவை

புற்களின் பலத்தையும்
பூக்களின் குணத்தையும்
அறியத் துடிக்கும் வீரப்புயல்கள் - அவை

ஆதி மனிதனின் ஆற்றலைக் கொண்டு
ஆயிரம் நூற்றாண்டுகள் கழித்துப் படைத்த
அற்புதமான சிற்பங்கள் - அவை

இருப்பினும்
உற்று நோக்கினாலன்றி எவரும்
காண இயலாத
ஓர் கூழாங்கல்பட்டு
சுக்கு நூறாகிவிட்டது சில

உடைந்து போகும் கனவுகள்

- வெண்ணிலா பாரதி

எழுதியவர் : வெண்ணிலா பாரதி (16-Nov-12, 2:37 pm)
சேர்த்தது : பாக்கியலட்சுமி
பார்வை : 216

மேலே