என் தமிழ் எப்போதும் உயிர் கொடுக்கும்

உயிரை எடுத்தேன்
" அ " மங்கலம்
அது மங்கலம் ஆனது
அதிர்ச்சியுற்று
அழகு தமிழே ஏன் என்றேன்

தமிழ் சொன்னது
அட மடையா
உயிர் என்பது உருவாய் தெரியாது
மங்களத்தின் உள்ளுக்குள் பார் மூன்றுமுறை
உயிராய் இருக்கிறேன் என்றது

ம் + அ , க் + அ , ல் + அ - அட சரிதான்

என் தமிழ் எப்போதும் உயிர் கொடுக்கும்

எழுதியவர் : (16-Nov-12, 8:58 pm)
பார்வை : 230

மேலே