கண்ணீரே வாழ்க்கையாக
எனக்குப்பின் எனக்கு மூன்று தங்கைகள் இருக்கின்றனர். தாய் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்கள். தந்தை என்னின் டீனில், சீட்டு விளையாடும்பொழுது மொத்த சொத்துக்களையும் மூன்று வருடங்களில் இழந்த நிலையில், மாரடைப்பில் தன் 40 வயதில் கவலையின்றி இறந்துபோனார். நான் 12 th மிகவும் நன்றாகப் படித்திருப்பினும், பணம் போதாமையினாலும், என் தங்கைகளை கவனிக்க வேண்டியதிருந்ததாலும் பிகாம் படித்தேன். மாலையில் ஒரு நகைக்கடையில் கணக்கு எழுதும் ஒரு வேலையிலும் சேர்ந்துவிட்டேன். நகைக்கடை என்றதும் நிறைய சம்பளம் என்று தவறாக நினைத்துவிட வேண்டாம். ஆனாலும் எனக்கு அது ஓரளவுக்கு போதுமானதுதான்.
பின்னர் ca படிப்பு, எல்லென்டீயில் இப்பொழுது வேலைகிடைத்து, இரு அன்புத் தங்கைகளுக்கும் திருமணம் முடித்துக்கொடுத்து, அவர்களின் குழந்தைகளுக்கு காதுகுத்தி முடித்து, அம்மாவின் கேன்சரைக் கண்டுபிடித்து, குணப்படுத்தி, அன்புக் கடைசித் தங்கையை டாக்டருக்கும் படிக்கவைத்து, அப்பாடா நெடும் பயணம். ஆத்மதிருப்தி அளித்த இன்பப்பயணம்.
இப்பொழுதுதான் பிரச்சனை. என்னுடன் சக வேலைசெய்யும் பெண். அவள் மிகவும் அழகானவள்தான். தோழியாகத்தான் அவளுடன் பழகியிருந்தேன். மதியவேளைகளில் சக நண்பர்களுடன் இன்பமாக எல்லோரும் அரட்டையடித்துக்கொண்டு வாழ்ந்தவர்கள்தான். அவளின் கண்கள் அவளின் காதலை உணர்த்தத் துவங்கியது. ஒருநாள் வேலைமுடித்து செல்லும்வேலையில் காபிஷாப்புக்கு அழைத்தாள். முதல் அனுபவம் என்பதினால் கொஞ்சம் குருகுருவேனவே இருந்தது. அங்கு லிப்டில் மாடிக்குச் செல்லும்வேளை எங்களைத் தவிர எவருமில்லை. ஆனாலும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. என்னோடு எப்படியெல்லாம் அரட்டையடிப்பாள் அவள். உணவுவேளை பொழுது அவள் அடிக்கும் லூட்டி என்ன, கிண்டலும் கேலியும் என்ன. இங்கே பேரமைதி. இப்பொழுது அவளும் அமைதியானது கொஞ்சம் புல்லரித்தது. இதுதான் காதல்போலும். எதிரெதிரில் அமர்ந்ததினால் ஒருமுறை கால்கள் உரசிக்கொண்டன. அல்லது வேண்டுமென்றே அவள் கால்களை நீட்டி உரச வழி செய்திருக்கவேண்டும். ஒரு ப்ரௌனி வித் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்துவிட்டு, என்ன விஷயம் என்று துணிவுடன் அவளைக் கேட்டேன்.
குனிந்துகொண்டே தன் காதலை சொன்னாள். பின்னர் அவளின் ஒன்றுக்குமற்ற மாமன் மகன் ஒருவன் இருக்கின்றான், அவன் அவளை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி மிரட்டுகிறான், என்றாள். அவன் ஒரு பக்காவான கிராமத்து ரவுடி. நாம் உடனேயே திருமணம் செய்துகொள்ள வேண்டும், தாமதித்தல் வேண்டாம் என்றும் சொன்னாள். அவன் அவனின் கடந்துவந்த வாழ்க்கையின் வடுக்களை அவளுக்கு உணர்த்தி, என் தாய்தான் எல்லாம் முடிவு செய்தல்வேண்டும் என்று சொன்னான். பின்னர் பேசிமுடிந்து கிளம்பும்பொழுது, அவன் மனத்தில் ஒரு புத்துணர்வுடன் பிரிந்து சென்றான். அவள் ஒரு கலக்கத்துடனேயே வீடுவந்து சேர்ந்தாள்.
வீட்டில் அவளது மாமன்மகன் அமர்ந்திருந்தான். மொத்தவீடும் அவனை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அம்மா அவனுடன் அவளின் அறைக்கு வந்துகொண்டிருந்தது தெரிந்தது. அது அவளுக்குப் பிடிக்கவில்லை.
அவனுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதுமட்டும் உணர்வு உரைத்தது. இரவு படுக்கையிலும் உறக்கம் கொள்ளவில்லை. காலையில் தன் தாயிடம் திருமண விஷயம் குறித்து பேசிட அமர்ந்தபோழுதுதான் அந்த போன் வந்தது. அவனின் நண்பன்தான் பேசினான், அவன் காதலியான அந்தப்பெண்ணைக் கொலைசெய்திருக்கிறான் அந்த மடையன் மாமாமகன். அவனால் வாயடைத்துப்போய் ஒன்றுமே பேசிடமுடியவில்லை. அதிர்ச்சியில் அசையாமல் இருந்தான். அவனின் அம்மா கேட்டாள், உன்னின் அத்தைமகள் ஒருத்தி அழகாக இருப்பாள், அவளை உனக்குக் கேட்கலாமென்றிருக்கிறேன், உனக்கு சம்மதமா என்றாள். எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லையம்மா. நீங்களும் எந்தங்கைகளுமே எனக்குப் போதும் என்றான், கண்களின் கண்ணீருடன்.
அந்தக் கண்ணீர் பல அர்த்தங்களை சுமந்து நின்றது.