காதல் இலக்கணம்
வேகமாக பேருந்து ஓடிகொண்டிருந்தது.கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.இந்த பேருந்துல் தான் ஆர்த்தியும் பயணம் செய்தால்,சற்று முன்கோபியும் கூட,அடிக்கடி தன் கணவரோடு சண்டைபோடுவாள்.விவாகரத்து செய்வதற்காக வக்கீலை பார்க்கத்தான் அவள் சென்றுகொண்டிருந்தாள்.
சாலையோர நிறுத்தம் ஒன்றில் பேருந்து நின்றது.அந்த வயதான தம்பதியனரும் ஏறினர்.அமர்வதற்கு யாரும் இடம் தரவில்லை.அந்த வயதான தம்பதியனர் இருவரும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர்,இதை ஆர்த்தி கவனித்து கொண்டிருந்தாள்.நல்ல வேலை நாம் விவாகரத்து வாங்க போறோம் இல்லையென்றால் நானும் இப்படிதான் சண்டை போட்டுகொண்டிருப்போம் என்று நினைத்து கொண்டாள்.
அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஆர்த்தியின் அருகே இடம் காலியானது,அந்த பாட்டியை அமருமாறு கூறினாள்.அந்த பாட்டி திரும்பி பார்த்து நீங்க வந்து உட்காருங்க என்று கூறினார், அந்த தாத்தாவும் நீயே உட்காரு எனக்கு ஒன்றும் தேவையில்லை என்று கோபமாக கூறினார்.பாட்டி ஏதும் கூறாமல் எழுந்து தர தரவென அந்த வயதான தாத்தாவை இழுத்து வந்து ஆர்த்தியின் அருகே அமர வைத்தாள்.ஏற்கனவே Hospittalukku நேரம் ஆச்சு,உனக்கு வேற BP ,சுகர் -னு வியாதி வேற இதுல்ல நின்னுகிட்டே வந்த மயக்கம் போட்டு விழுந்திடுவிங்க,சொன்னா கோபம் வருதா?? என்று தாத்தாவை முறைத்தார்,இப்போ தாத்தாவால் எதுவும் பேச முடியவில்லை. பின்னர் பிஸ்கட் கொடுத்து தண்ணீரும் தந்தார்.
இதை கவனித்த ஆர்த்தி தன் கணவரும் இப்படி தானே என்று ஒருகணம் யோசித்தாள்,அவளை அறியாமலே கண்களில் நீர் எட்டி பார்த்தது.அந்த தம்பதியினர் இறங்கி மருத்தவமனைக்கு சென்றார்கள்.ஆர்த்தியின் விவாகரத்து வியாதி சரியானது.
-பரமகுரு.க