************காதலியின் திருமண அழைப்பிதழ்************
(பெங்களூர் to திருச்சி பேருந்தில் மித்திரன் பயணம் செய்கிறான், இந்த கதை அவனை பற்றியது மட்டுமே ஆகையால் மிதரனின் பார்வையில் படிக்கவும்)
*********காதலியின் திருமண அழைப்பிதழ்************
என் பெயர் மிதர்ன்,வயது 26,இப்போ நான் பெங்களூர்-ல வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன்.எல்லாரையும் போல எனக்கும் ஒரு பெண் மீது காதல் வந்தது.அப்போ நான் இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து கொண்டு இருந்தேன்,கிட்ட திட்ட ஆறு வருடங்களுக்கு முன்னாடி,அப்போ தான் நான் அவளை முதன்முதலாக பார்த்தேன்,பெயர் தெரியாது,கொஞ்சம் நாள் ஆனா பிறகுதான் பெயர் தெரிஞ்சது-வான்முகில் என்று,அவளும் அழகு அவளது பெயரை போல.
அவளும் என்னோட ECE -Department தான்,அவக்கிட்ட எப்படியாவது இன்னக்கு பேசிடனும் என்று சென்றேன்,என்ன கேட்குராதுன்னு தெரியல,சும்மா பெயர் என்னனு கேட்டேன்,மிரட்ற மாதிரி ஒரு பார்வை பார்த்தாள்,கொஞ்சம் பயமா தான் இருந்தது,கொஞ்சம் நேரம் அவள் எதுவுமே பேசல,நானும் அந்த இடத்தவிட்டு நகர மாதிரி இல்ல,வேற வழி இல்லாம பெயரை சொன்னாள்,இப்படிதான் நான் அவள் பெயரை தெருஞ்சுகிட்டேன்.அப்பரும் நாளைக்கு same டைம் மீட் பண்ணலாம்-னு சொன்னேன்,நாளைக்கு பார்க்கலாம் என்றாள்,
சொன்ன மாதிரியே அடுத்த நாள் சென்றேன்,அவள் அன்று கல்லூரிக்கு வரவில்லை.அப்பறம் பேசி,பழகி நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது,பிப்-14 என்னோட காதலை சொன்னேன்,யோசிச்சு சொல்றேன் 9 மாதம் என்னை அலையவிட்டு அப்பறமா தான் சொன்னாள்,என் பிறந்த நாள் அன்று.
அப்பறம் எனக்கு campus interview - ல வேலை கிடைத்தது,அப்போ அவள் 3 -இயர் படிச்சிகிட்டு இருந்தாள், நான் பெங்களூர் வந்துட்டேன்,
அதுக்கு அப்பறம் ஏதேதோ நடந்து போச்சு,அவளுக்கு திருமணம் நடக்கப்போவதாகவும்,போன் செய்து பேசினாள்.அவளது திருமண பத்திரிக்கை அப்போது தான் நான் பார்த்தேன்,என் பெயர் எழுதி எண்ணுக்கு முதல் பத்திரிக்கை அனுபியிருந்தாள்,1 வாரத்திற்கு முன்பே,இப்போ அவளுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளையும் பெங்களூர்தான் வொர்க் பண்றாராம்.
மாப்பிள்ளை பெயர் கூட மித்திரன்,அட என்னோட கல்யாணத்திற்கு தான் போய்கிட்டு இருக்கேன்,இன்னும் 3 -நாளில்,மறக்காம எல்லாரும் வந்திருங்க்க.
பேருந்தின் ஜன்னலோரும் அமர்ந்து கொண்டு கடந்த காலத்தை பற்றி எண்ணி கொண்டே மித்திரன் சென்றான்......சுபம்.
-க.பரமகுரு