இவள் கூந்தலுக்குள் சிறை புகுவேன்...!

புல்லாக்கு மூக்கில் மின்ன
புதுச்சீலை நதியுடுத்தி
சல சலவென கொலுசொலியாய்
சங்கீதம் புள்ளினம் பாட
பூரித்தே ரசிக்கின்றேன்
புதுப் பெண்ணாம் இயற்கையை நான்....!
மன மேடை அமைத்து விட்டேன்
மாலை வரை ரசித்திருப்பேன்
இரவு வந்த பின்னும் நான்
இவள் கூந்தலுக்குள் சிறை புகுவேன்...!

எழுதியவர் : (19-Nov-12, 10:03 pm)
பார்வை : 171

மேலே