அன்பே காத்திரு ...

உயிரில் கலந்த உறவே ,
உனையன்றி இல்லையே என் வாழ்வே ,
காதலென்பதை என்னவென்று புரிய வைத்தவளே ,
காலமெல்லாம் காத்திருப்பேன் என்னவளே ,

அடி பெண்ணே ,
அறிவாயா என் ஜீவனே ,
உன் குரல் என் அலைபேசியில் ஒலிக்கும் வேளை ,
உள்ளமெல்லாம் துள்ளுதே சிறகு கட்டி ,

ஆகாயம் கடந்து
அன்பென்னும் வானில் பறக்கிறேன் ....
ஆகா அது குரலொலியா ...இல்லவே இல்லை ,
அது குயிலிலும் இனிய சங்கீதமல்லவா ,

அன்பே , என் ஜீவனே !
ஆர்பரிக்கும் அலைகடல் கூட ,
ஆஹாஹா உன் குரலெனும் சங்கீதத்தால்
அடங்கிடுமே ,

உலகிலே பல பாடகிகள் - ஆனாலும் ,
உன் குரல்போல் இனிமை இல்லை
அவர்கள் குரல் எனக்கு ,
அதை நீ அறிவாயோ ??

நாளெல்லாம் உன்குரல் ஓசை கேட்க ,
நான் செய்யும் முயற்சிகள் ஒன்றா இரண்டா ,
நாளெல்லாம் உனை என் கண்முன்னே வைத்து ,
காக்க துடிக்கிறேனடி ,

நாம் ஒன்று சேரும்
நாளுக்காய் தவமிருக்கிறேன் - அந்த
நாளும் வந்து சேரும் ,
நம் அன்பு மனங்கள் ஒன்று சேரும் ,

காத்திருக்கும் காதலியே ,
கனிவான கணவன் மனைவியாக ,
குறைகள் ஏதும் இன்றி ,
குழந்தைகள் பல ஈன்று ,

உன் குயில் பாட்டுதனை நாளும் நான் கேட்டு ,
சுகமாக வாழும் நாள் தொலைவில் இல்லை ,
அதுவரை அன்பே காத்திரு .......
நம் வாழ்வின் விடியலுக்காக .....

எழுதியவர் : தமிழன்பன் என்றும் புதியவ (20-Nov-12, 8:05 am)
Tanglish : annpae kaathiru
பார்வை : 475

மேலே