மீண்டும்

மீண்டும் வரவில்லை உன்னிடம்,
எத்தனையோ இடிபாடுகளுக்குள்ளிருந்து,
மீண்டு வந்திருக்கிறேன்,
முடிந்தால் என் காயங்களுக்கு மருந்திடு,
உன் இழப்புகளை நினைத்தே காயப்படுத்தாதே நடப்புகளை,
உன் கூரிய வார்த்தைகளால்..............

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (21-Nov-12, 10:20 pm)
சேர்த்தது : kannankavithaikal
Tanglish : meendum
பார்வை : 74

மேலே