மின்வெட்டு

இருட்டில் வாழ பழகிவிட்டோம்
இனி வெளிச்சம் தேவையில்லை

வெளிச்சம் தேடி அலைந்து
விளக்கில் மடியும்
விட்டில் பூச்சியல்ல
நாங்கள்

இனி மின்வெட்டு தளர்ந்து
மிகையாய் வந்தாலும்
வீடுகளுக்கு
அதிகம் வேண்டாம்
ஆலைகளுக்கு கொடுங்கள்
ஆயிரம் தொழிலாளர்கள்
வாழ்வில் வெளிச்சம் வரும்

எழுதியவர் : (22-Nov-12, 6:56 am)
பார்வை : 108

மேலே