புதைகுழிக்குள் போகும் விவசாயம்
ஆண்டாண்டு காலமாய் செய்த விவசாயம்
ஆழ்குழியை நோக்கி போகுது இப்ப
உச்சாணிக் கொம்பிலேறி உரம் விக்குறதால
உப்பு சப்பில்லாம போச்சு எங்க விவசாயம் இப்ப
உயிரைக் கொடுத்து உழைக்கும் விவசாயிக்கு
உரம் வாங்கிப் போட வழியில்லை இப்ப
அஞ்சாறு பிள்ள பெத்து நாங்க பாத்த விவசாயம்
அல்பாயுசா ஆகி அழிஞ்சு போகுது இப்ப
கர்னாடகாவ தண்ணிக்காக எதிர்பார்த்து காத்திருந்து
கருகித்தான் போச்சு நாங்க நட்ட நாத்து இப்ப
காசு பணம் பாக்க கடல்கடந்து போனதால
கழனி வேலை செய்ய ஆளில்ல இப்ப
அரசாங்கம் கொண்டுவந்த நூறுநாள் வேலையால
ஆடித்தான் போச்சு எங்க பரம்பர வேலை இப்ப
விழுந்து விழுந்து பாடுபட்டு வெளச்சத
வித்து காசு பாக்குறான் இடைத்தரகன் இப்ப
பலகாலம் பாத்த விவசாய நிலமெல்லாம்
பல தரகர் பயலால பாழா போச்சு இப்ப
மலிந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால
மணிநிலமும் மாறி மாடி வீடாச்சு இப்ப
அரசாங்க வேலைகள பலர் அனுதினமும் தேடுறதால
அன்னம் தரும் விவசாயத்தை மறந்துட்டாங்க இப்ப
புத்தி கெட்ட அரசியல்வாதிகள நம்நாடு பெத்ததால
புதை குழிக்கு போகுது எங்க விவசாம் இப்ப