வஞ்சகற்கு ஒரு சவால்

என்னையே இடித்துப் பார்க்க
எடுத்ததோர் எண்ணம் கேட்டு
சிரிப்பு தான் வந்தது எனக்கு
சிந்தனையில் இல்லை செருக்கு

அழிக்க ஓர் ஆயிரம் கூட்டம்
அணி திரண்டு வந்தால் கூட
அஞ்சுதல் என்னவென்று
அறியாது எந்தன் நெஞ்சு

போருக்குப் படை எடுத்து
போவதென் வழக்கம் இல்லை
போரொன்று வந்து விட்டால்
புறம் காட்டிப் பழக்கம் இல்லை

நெஞ்சத்தில் வஞ்சம் நீங்கி
நினைவினில் அன்பே ஓங்கி
நித்தமும் உழைத்தே வாழ்ந்தால்
நிதமும் நான் பிழைத்தே வாழ்வேன்

எதையுமே தாங்கி நிற்கும்
இதயம் தான் இருக்கு எனக்கு
இடித்து நீ பார்க்க வந்தால்
இழப்பு தான் அறிவாய் உனக்கு

எழுதியவர் : நா.குமார் (22-Nov-12, 4:41 am)
சேர்த்தது : kavikumar09
பார்வை : 134

சிறந்த கவிதைகள்

மேலே