வாடகை மூச்சில் வாழாது

இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று

வீரத்தை குண்டுகள் துளைக்காது
வீரனைச் சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது

எழுதியவர் : பாவலர் அறிவுமதி (9-Mar-10, 9:02 pm)
பார்வை : 3007

மேலே