நட்பு

கண் இமைகள் காற்றோடு மனம் இறங்கி
பின்னர் கைவிரல் ரேகைகள்
நட்பு கொள்ளும் உண்மையான நட்பு !

நான்கு பாதங்களும்
இரு கைகளும் நட்பாக மாறி
மழைத்துளியும் பொறமை கொள்ள வேண்டும்
நம் நட்பைக் கண்டு !

நிலவொளியும் கிணற்று நீரும்
காற்றுத் துகளின் தடையை தகர்த்து
உண்மை நட்பாய் பின்பம் தெரிகிறது !

சிறியனின் முதன்மை நிறம்
ஆழ்மையாக அதன் இனத்தோடு
உண்மையான கொண்டு
பிறரை பயமுறுத்துகிறது !

வானத்திற்கும் மேகத்திற்கும்
உள்ள தொலைவை
பூமித்தாய் ஒரு போதும் காட்டுவதில்லை
அதுபோல
நட்பிற்கு தொலைவு தெரியாது !

விமான பாதுகாப்புப் பெட்டகமும்
ஆழ்மனமும் ஒன்று !
உடல் இறந்த பிறகே
உண்மையாக விளக்கம் கூறக் கூடியவை !

கண்ணால் பேசப்படும் வார்த்தைகள்
உண்மை அன்பை
உணர்ந்தவர்களால் மட்டுமே உணர முடியும் !

இல்லா பொருளுக்கு பொருள் தேடி
அலையும் ஜீவனும்
முதலில் கண்டுணர்ந்த உண்மை !

காதலும் பொறமை கொள்கிறது
உன்னை தண்டி வந்தவர்கள்
என்னிடம் வந்து
என்னை பிடிக்கவில்லை என்றால்
மீண்டும் உன்னிடம் தஞ்சம் அடைகிறார்கள் !
அதன் ரகசியம் என்னவோ ?

காற்று ஆகாயத்துடன் நட்பு கொண்டு
நீர் நிலத்துடன் நிலை கொண்ட நட்பு காட்டி
மீண்டும் நிலத்தின் நெருப்பை
அணைக்க முயல்கிறது !

நம்மை அறியாமல் தான்
ஐம்பூதங்களும் நட்பை வெளிப்படுத்துகிறது !

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (30-Nov-12, 1:01 pm)
Tanglish : natpu
பார்வை : 657

மேலே