என்ன செய்தாய் என்னை?
நீ என்னை பார்க்கும் தருணங்கள் மட்டும்
என் கரு விழிகளும் வெட்கம் கொண்டு சிவக்கின்றது............!
நீ என் அருகினில் வரும் தருணங்கள் மட்டும்
என் இதயம் துடிக்க மறந்து கால் முளைத்து
குதிக்கின்றது............!
நீ என் விரல் தொடும் தருணங்கள் மட்டும்
என் பெண்மை உற்சாக
கூச்சலிடுகிறது.........!
எனக்கான எதுபும் என் பேச்சை கேட்காமல்
உன் முன்னே வந்து மண்டியிட்டு
நிற்கின்றது.................!
என்ன தான் செய்தாய் என்னை...?