நீநான்
என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டு
கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறாய்.
முந்தானையால் உன்முகம் மறைத்து
அழகையெல்லாம் சோதிக்கிறாய்.
கால்களினால்கூட கோலமிட்டு
காதல்மொழி காட்டி நிற்கிறாய்.
கண்ஜாடை மறைத்துவிட்டால்
பெண்ஜாடை விலகிடுமென நம்புகிறாய்.
கொப்பளிக்கும் வார்த்தைகளின்
தடம் புரியாமல் தவிக்கிறாய்.
மணம் பரப்பிட முடியாமல்
மல்லிகையை தடுக்க முயல்கிறாய்.
குழலசைவும் கொழுசொசையும்
குழைந்து குளாவுவதை புரிந்திடாமல்,
கொண்ட காதலைத் துறக்க
பொய்வேஷம் கொண்டலைகிறாய்.
மறைத்திருந்தாலும் மேகம்
விலகினபின் நிலவு வானுக்குத்தான்.
தெரிந்துகொல். புரிந்துநில்.