விண்ணப்பம்
இறைவா... உனக்கு ஒரு விண்ணப்பம் ... கொஞ்சம் கொடுப்பாயா? உன்னை அபிஷேகம் செய்யும் பால்களில் . கொஞ்சம் கொடுப்பாயா? வாடுது சில பச்சிளங்கள்!!! கொஞ்சம் அருள்வாயா? உனக்கு அருளிய பண்டங்களில்....... கொஞ்சம் அருள்வாயா? ஏங்குது சிறு நெஞ்சங்கள்!! கொஞ்சம் தானம் செய்வாயா? உனக்குடுத்திய பழையனவற்றை கொஞ்சம் தானம் செய்வாயா? கேட்குது கிழிந்த இதயங்கள்!! விண்ணப்ப முகவரி.... ஏழை.கோம்.... உன் பதிலுக்காக ஆவலுடன் .... சிரிக்காமல்.... நாங்கள் சிரித்தால்...உன்னை காணலாம்.... தெரியவில்லை...உன் பக்தர்களுக்கு..... !!! அதனால்தான் விண்ணப்பத்தை உனக்கே அனுப்புகிறேன்!!!