தனிமையில் விட்டுச் சென்றாலே ...!

உயிரே உயிரே என்று
உருகி உருகி நேசித்த
என்னை இப்படி தனிமையில்
உன்னை நினைத்து நினைத்து
உருக வைத்துவிட்டாயே. . .
உயிர் உள்ளவரை உன்னோடு
இருப்பேன் என்று சொல்லிவிட்டு
என் உயிரையும் எடுத்து
சென்று விட்டாயே...
என் உயிர் என்று சொன்னதாலோ...?
நொடி பொழுது கூட
பிரிய முடியது
என்று கூறிவிட்டு...
என் உயிர் நாடியை பிடுங்கி
சென்று விட்டாயே...
கனவிலே நாம்
வாழ்ந்த வாழ்க்கையை
நிஜமாக்க நினைத்தேன்...
ஆனால் நீயே
கனவாகி போனாயே...
உன் நினைவுகளால்
நினைத்து நினைத்து வாடுகிறேனே....
காதல் காதல் என்று
உன் மேல் வைத்த
அன்பை கடவுளின்
மேல் வைத்திருந்தால்
கூட இந்நேரம்
முக்தி பலன் அடைந்திருப்பேன்....!

எழுதியவர் : கருணாநிதி.கா (4-Dec-12, 3:52 pm)
பார்வை : 345

சிறந்த கவிதைகள்

மேலே