என் காதல் பொய்யா? மெய்யா ?
பொய்யாக நேசிக்கிறேன்
என்று நினைக்கிறாய் . . .
மெய்யாக நேசிக்கின்ற என்னை....
நானும் உன்னை பொய்யாக
நேசிக்கலாம் என்று....
பொய்யாக நினைத்தாலும்
மெய்யாக சொல்கிறேன்
பொய்யாக நேசிக்க இயலவில்லை...
ஒருவேளை நான்
மெய்யாக நேசிக்கின்றேன் . . .
என்று நீ நினைக்கும் போது
பொய்யாக இருக்கும்...
நான் மெய்யாக இறந்திருப்பேன்...
நீ பொய்யாகவே என்னை
நினைத்துக் கொள்
நான் மெய்யாகவே
உன்னை நேசித்துக்கொண்டு
உயிர் வாழ்வேன். . .