மூடி கிடக்கட்டும்
அநியாயங்களை
நேயபடுத்துவதற்க்காக
நியாயங்களை
காயப்டுத்திவிட்டு
தாயம் விளையாடும்
என் தாரகையே...
தலையில் பாரத்தை
தூக்கி வைத்துவிட்டு
வழிகளில் முற்களை தூவி
நடக்கச் சொன்னபோது
உனக்காக வலிகள் தாங்கி
பூக்கள் கொண்டு வந்தேன்
பூக்களை வாங்கிக்கொண்டு
விழிகளை பிடுங்கிவிட்டு
உறங்கவைப்பதற்காக
தாலாட்டும் உன்
ஒப்பாரி கேட்டு
இறந்து போனது என் மனசு
தலையை தடவிக் கொடுத்து
கழுத்தில் கத்தி வீசும்
கசாப்புக் கடைக்காரனுக்கும்
வார்த்தைகளால்
அன்பு ஒத்தடம் இட்டு
சலனமின்றி
உயிருக்கு சமாதி சமைத்த
உனக்கும் அதிகம்
வித்தியாசமில்லை
ஆனாலும் அவனின்
கத்திக்கு பலியான
உயிரின் துடிப்பு சிலநிமிடம்
உன் புத்திக்கு
பலியான உயிரின்
துடிப்போ ஆயுள்வரை
முடவர்களின் இசையில்
ஊமைகள் பாடிய பாடலை
செவிடர்கள் கேட்டு
ரசித்ததாக
குருடர்கள் பார்த்து
சொன்னதை கேட்டவனாய்
என் மௌனத்தின் மௌனம்
திசைகள் தொலைத்து
துருவங்களாய் பிரிந்த
புரிதல்கள் இல்லாத
வாழ்க்கையின் அர்த்தங்கள்
புரியாதுபோனது
புரிந்து போனதும்
பிரிந்து போனது
நீயும் நானுமல்ல
நம் காதலும் தான்
இனி மூடியே கிடக்கட்டும்
கண்கள் இல்லாத
நீ வாசிக்க நானெழுதிய
காவியங்கள் எனக்கானதான
எனக்குமட்டுமேயாக
எனக்குள்ளேயே இருக்கட்டும்
இனி அதை ஒரு
நேசிக்க தெரியாத எவரேனும்
வாசித்து நேசித்து விடாமல்
இருக்கவேணும்
அது மூடியே கிடக்கட்டும்.

