ஓடும் நதிக்கு தடையா
ஓடும் நதியையும்
சீரும் கடலையும்
சிறைவைத்தல் கூடுமோ ?
அதை ஒருவருக்கே
சொந்தமென்று
ஒலமிடல் இங்கு தகுமோ ?
தேசிய நீரோடை
அரசியல் ஆரவாரத்துமட்டுமல்ல
பாய்ந்தோடும்
ஆறுகளுக்கும் பயன்பட
வேண்டும் !
அப்போதுதான்
கண்ணீர் சிந்தும்
டெல்டா விவசாயி
செந்நீர் சிந்தாமல்
சிரித்திர்ப்பான் !
அவன் முகம் பார்த்து
முளைத்த பயிர்கள்
மலர்ந்திருக்கும்
காவிரி ஆற்றின்
கடைமடை பகுதியும்
செழித்திருக்கும்

