என் அணில்குட்டி

எங்கள் வீட்டு முற்றத்தில்
கண்டேன் ஒரு அணில்குட்டி
கூட்டமாய் அணில்கள் வந்தாலும்
தனியாகத் தெரியும் என் செல்லக்குட்டி

உருவத்தில் சிறியது ஆனால்
வால் மட்டும் பெரியது
நீண்ட தடித்த வால் அவன் சின்ன
உருவத்திற்கு ஏனோ
அழகுதான் சேர்த்தது

என்னை கவர்ந்த "வால் பையன்"் அவன்

அம்மாவின் அடுப்படியில் இருந்து
தினம் ஒரு முந்திரி  ஒரு பாதாம்
அவனது சிற்றுண்டி
என் பொறுப்பு

மாதம் இரண்டு ஆனது எங்கள்
நட்பும் மிக நெருக்கமானது
வீட்டில் அனைவருக்கும் என்
செல்லக்குட்டி அறிமுகமானான்
கடைசியாக அம்மாவுக்கும்

அவ்வளவுதான்.......

முந்திரி விற்கும் விலை என்ன
பாதாமின் விலை என்ன
உனக்குமின்றி எனக்குமின்றி இந்த
அணிலுக்கா....இவையிரண்டும்

என்ற அம்மாவின் கண்டிப்பில்

சமையலறையின் அலமாரியில்
மேல் அடுக்கு சென்றது
முந்திரியும் பாதாமும்

மறுநாள் காலை அங்கே வந்தது
என் அணில்குட்டி
முந்திரியில்லை பாதாமுமில்லை
ஏமாற்றத்தில் சென்றது

இரண்டு மூன்று நாள்
இதே நிலை தொடர்ந்தது
அதன் பின்னர் என் செல்லக்குட்டி
அங்கு வரவே இல்லை

எங்கள் பிரிவு
தெரிந்ததுதான் என்றாலும்
ஏனோ மனம் கனத்தது

ஒரு நிழற்படமாவது அவனை
எடுத்திருக்கலாமோ என்ற
வருத்தம் வந்தது

முந்திரியும் பாதாமும்
எங்கள் நட்பின்
சின்னங்களாயின......

பத்து வருடங்களுக்கு முன்
பதிந்த நிகழ்வு தான் என்றாலும்

இன்றும் சமையலறையில்
பரபரப்பான நிலையிலும்

முந்திரியும் பாதாமும்
கண்ணில் பட்டால்
அந்த நொடி

மின்னல் போல
மனதலைகளில்
துள்ளி வந்து ஓடுவான்
என் செல்லக்குட்டி

எழுதியவர் : (6-Dec-12, 5:04 pm)
பார்வை : 109

மேலே