சொல்லடி பெண்ணே....

ஏனடி என்னை வெறுக்கிறாய்?
நானென்ன தவறிழைத்தேன்?
நாளுமுன்னை நினைப்பதைதவிர...

மறந்துவிடத்தான் சொல்கிறாய்
மறக்க மறுக்கிறதடி என்மனம்...

கொஞ்சிபேசிய வார்த்தைகள்
கொல்லுதடி மறக்கநினைக்கையில்...

உன்னைதேடிய மனதொன்று
உணவென்பதை மறந்ததடி...

கால்களிரண்டும் பின்னுதடி
காளைநான் நடக்கையில்...

கண்களிரண்டும் சுழலுதடி
கண்மணியுனைக் காணாமல்...

நானுன்னை பிரிந்தநாள்முதல்
நரகவேதனையில் உழலுகிறேனடி...

எழுதியவர் : சுபா பூமணி (6-Dec-12, 5:05 pm)
பார்வை : 143

மேலே