பணி நிமித்தமாய்.....
பகலில் வாடி இரவில் மலர்ந்தது
அவளின் முகம்!
கழிவறைக்குள் கல்லறை கட்டிக்கொண்டது
அவளின் தாய்பால்!
சுருங்கி விரிந்த இமைகள் விழுங்கிக்கொண்டது
அவளின் கண்ணீரை!
விழிநீராய் வழிந்தோடிக் கொண்டிருந்தது
அந்த முகம்!
மழலையின் இதழ்கள் மார்பை பற்றிய ஈரம்கூட
காயவில்லை!
பற்றி இருந்த இதழ்களை அவசரமாய்
விலக்கினாள்!
வாகனம் வாசலில் காத்திருக்க
கதறிய மழலையை கண்ணீரோடு முத்தமிட்டாள்!
தொலைபேசி அழைப்பிற்கு பதில் கூறிக் கொண்டே.....
வாகனத்தில் அமர்ந்தாள்.....
கனத்த மார்போடும்...., அழுத விழியோடும்....