காணாத கனவுகள் !

தவறு அவளதெனினும்
மன்னிப்பு கோரும்
வினாடிகளில் - குருதிக் குழாயில்
காதலும் ஓடும் மாயமென்ன ?

கோபங்கள் மேலோங்கி
விழிகள் உளிகளாய்
உருமாறி - எனை
விரல்களின் சிணுங்கல்களால்
கதற விடும்போது - காதலும்
சேர்ந்தே கத்துகிறது !

சண்டைகள்
சற்றோய்ந்தபின்
கோபத்தின் சருகாய்
விழிகளில் சறுக்கி
விழுந்து விளையாடுவது,
அவளின் கண்ணீர்த்துப்பாக்கி !
நீரெனினும், பொசுக்கும் !

கறந்தபாலின் சுவையந்த
அன்பை வடிகட்டி
கண்களில் ஊற்றிவைத்து
பாவையவள் பார்வையை
குழலாக்கி உறிஞ்சத் தரும்,
உன்னதக் காதலது,
உன்னதிக் காதலது !

தவறுணர்ந்து
எல்லாம் முடித்து,
நெருங்கும் அவளை...
நோக்கி ஓடும் நொடிகளில்..
இமைகள் திறந்திருகின்றன !

எப்போதாவது
காணாத கனவுகளில்,
இல்லாத காதலிகளின்
கற்பனை கரங்கள் - இங்கனமும்
தீண்டுவதுண்டு !

எழுதியவர் : வினோதன் (9-Dec-12, 5:10 pm)
பார்வை : 196

மேலே