அன்பெனும் திசையை நோக்கி !
இயற்கையின்
இனிய இசையை
இரவு பகலென
இடைவிடாது ரசியுங்கள் !
பெற்றதற்காக
பெருமைப் படுங்கள்
பெற்றவர்களை
பெருமைப்படுத்துங்கள் !
உறவுகளை
உபசரியுங்கள்
உதட்டோரம்
உருண்ட்டோடும்
உளமார்ந்த புன்னகையோடு !
நட்புகளை
நடு மனதில்
நட்டு வையுங்கள்
நயம்பட - உணர்வுகளை
நாசியாக்கி !
காதலிகளை
காக்க வைக்காமல்,
கண்களை கொடுத்து
கக்க வையுங்கள்
காதலை கடலாக !
பக்கத்துச் சீட்டு
பயணியிடமும்
பாசத் துளிகளை
பங்கு போடுங்கள் !
சாதி, மத
சதிகள் கடந்து
சாமானியனாய்
சவமாகுங்கள் !
அன்பை
அம்பாய்
அவதானித்து
அனுப்புங்கள்
அடிக்க வரும்
அனைவரிடமும் !
ஏனெனில்...
உருகிக் கெட்டியான உலகம்
கெட்டு உருகலாம்
யாரையும் கேட்காமலே
எந்த நிமிடமும் !
ஏதோ ஓர் விடியல்
நிரந்தர இருட்டை
உடுத்தியிருக்கலாம்,
சிதறுண்ட பூமித்துண்டுகள்
அழுதுகொண்டு
பால்வீதிக்கப்பால்
படுத்துகொண்டிருக்கலாம்,
நமக்காக !
மரணம் நிரந்தரம் !
நம்மனதின் நிறம் மாற்றுவோம்,
அன்பெனும் திசையை நோக்கி !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
![](https://eluthu.com/images/common/down_arrow.png)