மகாகவி சுப்ரமண்யபாரதி (11 . 12 .12 ) பிறந்த நாள்
மகாகவி சுப்ரமண்யபாரதி
சங்கால இலக்கியங்களில் உள்ள புலவர் பெருமக்கள் தங்களின் வறுமைகாரணமாக பல்வேறுபுலத்து மன்னர்களை புகழ்ந்து பேசிää பாராட்டி பரிசில் பெற்று தங்கள் வாழ்க்கையை வாழ்நாள் முழுதும் கழித்திருக்கிறார்கள். சமயப்புலவர்களை எடுத்துக்கொண்டால் பெரியபுராணத்தில் உள்ள அறுபத்துமூன்று நாயன்மார்களும்ää நாலாயிர திவ்யபிரபந்தத்தில் உள்ள பன்னிரெண்டு ஆழ்வார் பெருமக்களும் அவ்வளவு ஏன் பகவத்கீதையுமää; திருக்குரானும்ää பைபிலும் இறைவனையே மையப்படுத்தி பேசியிருக்கிறது.
அதுமட்டுமல்லää கடவுள் மறுப்புக்கொள்கையை ஆதரிக்க வந்த புலவர் குழந்தை இராவணனை தம் இரத்தம் (அதாவது திராவிட இரத்தம்) என்று பாடியிருக்கிறார். ஆக புலவர் பெருமக்களாக இருந்தாலும்ää புனித நூல்களாக இருந்தாலும்ää அவரவர்களின் இதயக்கமலத்தில் வீற்றிருக்கும் மன்னனையோää இறைவனையோ புகழ்ந்து தான் பேசியிருப்பார்கள். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன் மகாகவி சுப்ரமண்யபாரதி. எப்பொழுதும்ää யாரிடத்தும்ää எதையும்ää புகழ்ந்துரைத்தோää சுற்றி வளைத்தோää யாசகம் கேட்டோää அவனுடைய கவிதைவரிகள் இருந்ததில்லை. எதையும் நேர்பட பேசியவன்ää நேர்பட பேசு என்று தன் புதிய ஆத்திசூடி முலம் அனைவரையும் செயல்பட வலியுறுத்தியவன்.
1882-ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 11-ஆம் நாள் கார்த்திகை மாதம் இருபத்தி ஏழாம்நாள் தனுர் ராசி மூல நட்சத்திரத்தில்ää அன்னை சரஸ்வதி தேவியின் மறுஅவதாரமாக மானுட ஜன்மமாகää நெல்லைச்சீமை எட்டயபுரத்தில்ää சின்னச்சாமி அய்யருக்கும்ää லெட்சுமி அம்மாளுக்கும் சுப்ரமண்யனாக அவதாரம் செய்தார். தனுர்ராசியில் பிறந்ததனாலோää என்னவோää தெரியவில்லை தன்னை வில்லாக வளைத்து கவிதைகளை அம்புகளாக்கி ஆண்டவனாக இருந்தாலும் ஆண்டகையாக இருந்தாலும் குறிபார்த்து தாக்குதல் நிகழ்துவதில் விஜயனையே விஞ்சியவன். அவனுடைய கவிதைகளைப் பாராட்டி எட்டயபுரம் சமஸ்தானம் “பாரதி” என்ற பட்டம் தந்து கௌரவித்தது. பாரதி வறுமையில் பிறந்தவன்.
செல்வத்தோடு வாழ்ந்திருந்தால் உலகம் அவனை போற்றி மதித்து பல பட்டங்களைக் கொடுத்திருக்கும். என்னுடைய வழிகாட்டுதற்குறிய அய்யா தமிழ்கடல் நெல்லைக்கண்ணன் அவர்கள் தனது ஒவ்வொரு சொற்பொழிவின் போது “பணத்துடன் பழகாதே” என்பார். ஆம் பணம் ஒரு மனிதனை பல்லாயிரம் அடி உயரத்திற்கு அழைத்துச் செல்லும். அதே பணம் அவனை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடும். பணத்தை நாம் ஆண்டால் மனிதன். பணம் நம்மை ஆளத்தொடங்க இடம் கொடுத்தால் மிருகம். இதையெல்லாம் உணர்ந்து தான் பாரதிää பணக்கார நட்பான சமஸ்தான ராஜாவின் நட்பினைத் துறந்தான். நெல்லை இந்து கல்லுரியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்ததற்குப் பின்னால் வறுமைக் கல்லூரியில் சேர்ந்து பல முனைவர் பட்டங்களை வாங்கிக் குவித்தான். ஆம் வறுமைதான் அவனை சிற்பமாக செதுக்கியது.
அவன் வாழ்ந்த காலத்தில் அவனுடைய கவிதைகளையோ உள்ளத்து உணர்வுகளையோ இந்த சமூகம் அங்கீகரிக்கவில்லை. இந்த சமூகம் தன்னை அங்கீகரிக்கவில்லையே என்பதற்காக இந்த சமூகத்தை அவன் அங்கீகரிக்காமல் இருந்ததில்லை. காரணம் தேசீய உணர்வு. இந்த உணர்வு இயல்பாகவே அவன் குருதியில் குடிகொண்டது. இன்றைக்கு தேசீய உணர்வு பணத்திலே ஊறிப்போய் இருக்கிறது. பாட்டன் அணிந்திருந்த சட்டையை மகனோ பேரனோ அணிந்து கொள்வதால் தேசீய உணர்வு வந்துவிடாது.
இந்த பாரததேசத்தில் மக்கள் படும் துன்பங்களை கண்டு கொதிப்படைந்தான். மூடப்பழக்கவழக்கங்களின் முடைநாற்றத்தில் ஊறிதிலைத்தவர்களை எண்ணி மனம் பதைபதைத்தான். “நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்” இந்த வரிகளை எடுத்துக்கொண்டு தானோ என்னவோ கியூப விடுதலைக்குப் போராடிய பிடல்காஸ்ட்ரோ “எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு எவன் ஒருவன் மனம் துடிதுடிக்கிறானோ அவனும் நானும் நண்பர்களே” என்றான்.
பாரதிக்கு பிற உயிரை தன்னுயிராக பாவிக்கும் மனோபாவம் எப்படி வந்தது? “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளாரின் வைரவரி தான் அவனைத் தூண்டியிருக்க வேண்டும் என எண்ணுகிறேன். தன்னுடைய மனைவிää தன்பிள்ளைää தன்சுற்றம்ää அவ்வளவு ஏன் தனக்காககூட வாழ்ந்தது கிடையாது. இந்த நாட்டிற்காக இந்த நாட்டில் வாழும் முப்பதுகோடி அடிமைகளுக்காக தன்னுடைய சுகபோகங்களை துறந்து “காவி அணியாத இல்லறத் துறவியாகää கமண்டலம் ஏந்தா கடமைத்துறவி”யாக வாழ்ந்தவன்.
ஒருமுறை சங்கராச்சாரியார் தனது சொற்பொழிவின் போது “சுந்தரகாண்டத்தையும் கடோநிஷத்தையும் பாராயணம் செய்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறாமல் இருப்பதே மேலான வழி என்றும்ää இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.” என்று கூறினார். இதை அறிந்த பாரதி கொதித்தெழுந்தான். “ஒரு பதினான்கு வயது ஏழைச் சிறுவன் தந்தையை இழந்து தன் தாயாரும்ää தங்கைக்கும்ää தனக்குமாக எங்கேனும் போய் நாலு பணம் கொண்டு வந்தால்தான் அன்றாடம் அடுப்பு மூட்டலாம். அந்த கிழவனார் சொன்னதைப்போல அந்தச்சிறுவன் சுந்தரகாண்டத்தைக் கையிலெடுத்தால் அந்த குடும்பத்தைக் காப்பாற்றுவது யார்? இதெல்லாம் அந்த கிழவனாருக்கு வேணடுமானால் சரிபட்டுவரும்” என்று கடுமையாக எதிர்வாதம் செய்து கடைசிவரை ஆண்மை உள்ள பிராமணனாக வாழ்ந்த காட்டினான்.
அதுமட்டுமல்லää நம்முடைய சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் “உலகமே பொய்” என்றும் “மாயை” என்றும் பகர்கிறது. பகவத்கீதையின் சாராம்ஸமே இது தானே. இதற்கு பிராமண குலத்திலே பிறந்த பாரதி கொடுத்த விளக்கம் தான் அனைவரையும் அவன் பக்கம் ஈர்த்தது.
“இந்த மாயை பற்றி சந்யாசிகள் வேண்டுமானால் ஒயாமல் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். இதைப்பற்றி இந்த நிமிடம் வரை எனக்கு கவலை இல்லை. இதை குடும்பஸ்த்தனிடத்தில் திணிக்காதீர்கள். அந்த குடும்பஸ்த்தன் இதை நடுவீட்டில் சொன்னாலே அவச்சொல்” என்றான். ஆம் உண்மைதானே. நம் வீட்டிற்கு அருகில் ஒரு பெரியவர் வசித்துவருகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு புதுமணத்தம்பதியர் அந்தப் பெரியவரிடம் ஆசிவாங்க வருகிறார்கள். சாய்வுநாற்காலியில் அமர்ந்திருந்த அந்தப்பெரியவர் தன் காலில் விழுந்த தம்பதியினரை “ நல்லாயிருங்க.. இந்த உலகம் மாயைää எதுவுமே நிலையற்றதுää இன்றைக்கு உனக்கு வாய்த்திருக்கிற மனைவி நாளை வேறு ஒருவனுக்கு மனைவி. இன்று உனக்கு அமைந்திருக்கிற கணவன் நாளை வேறு ஒருத்திக்கு கணவன் எனவே இதை புரிந்து கொண்டு மகிழச்சியாக வாழுங்கள்” என்றால் அந்த புதுமணத் தம்பதியினர் மகிழ்;சியாக வாழ்வது எப்படி? பாரதி சொன்ன இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன்.
ஒருவன்ää அக்கம் பக்கத்தில் ஒரு பத்து லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி தன்னோட முன்னூறு சதுரஅடி வீட்டைக் கட்டி முடித்தான். கிரகபிரவேஷம் வைப்பதற்கு நாளும் குறித்தான். அந்த பெரியவருக்கும் அழைப்பிதழ் கொடுத்தான் அவரும் வந்தார் அவனை வாழ்த்தினார். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை அந்த பெரியவர் மட்டும் கிழிந்த சட்டையுடன் வெளியே வந்தார். அந்த மாயை பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களிடம் எடுபடுமா? அன்றாடம் பணிக்குச் செல்பவர்களிடம் இது எடுபடுமா?
அதுமட்டுமல்லää “நமக்கு தந்தை விட்டுவைத்துப் போன வீடும் வயலும் பொய்யா? நம் சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்கிறாளே மனைவிää அவள் பொய்யா? நம்குழந்தைகள் பொய்யா? நமக்குத்தேவை நீண்ட வயதுää நோயில்லாமைää அறிவுää செல்வம் இந்த நான்கையும் தந்தருளும் படி தத்தம் குலதெய்வங்களை மன்றாடிக்கேளுங்கள். எல்லா தெய்வங்களும் ஒன்று. அறம் பொருள் இன்பம் என்ற இந்த மூன்றிலும் தெய்வத்தின் ஒளி காணுங்கள். தெய்வ ஒளி கண்டுவிட்டால் நான்காம் நிலையாகிய வீடு தானகவே கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு இயற்கையிடம் நியாயம் கேட்கிறான். இதோ அந்த கவிதை வரிகள்:
“நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? - பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ? -உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?”
அதுமட்டுமல்ல நம்நாடு சுதந்திரம் அடைவதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றான் பாரதி. “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” இதைக்கேட்டு எல்லோரும் பாரதியை பித்தன் என்றார்கள். அதிகம் படித்தவர்களை பித்தன் என்றும் பைத்தியம் என்றும் சொல்வது தானே வழக்கம். ஒரு மொழியில் படித்து பட்டம் வாங்கியவன் பித்தன் என்றால் பாரதி எட்டு மொழிகளைப் பயின்றவன். ஆக அவன் பித்தன் அல்ல அந்த நிலையையும் கடந்து சென்ற சித்தன். முக்காலமும் அறிந்த ஞானி. நெல்லைக்கண்ணன் சொல்வதைப்போல அவன் ஞானத்தந்தை.
அவன் ஏன் “சுதந்திரத்தை பெற்றுவிட்டோம்” என்று முன்கூட்டியே சொன்னான் தெரியுமா? நம்நாட்டில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்திருக்கிறோமே கல்வி அறிவில்லாத தாழ்த்தப்பட்ட இன மக்கள்ää அவர்களுக்கு சுதந்திரத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான். உதாரணமாக ஒரு கட்சியினுடைய தலைவர் தேர்தல் பிரசாரத்திற்கு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அந்த ஊரில் ஒலிப்பெருக்கியில் பிரச்சாரம் செய்பவர்ää இன்னும் ஒரு மணி நேரத்தில் தலைவர் வந்துவிடுவார் என்றால் கூட்டம் கூடாது. “இதோ வந்துவிட்டார்ää இதோ வந்துவிட்டார்ää இதோ வந்துவிட்டார்ää” என்று தொடந்து பத்து முறை சொன்னால் கூட்டம் கூடிவிடும். அதற்கு பிறகு ஒலிப்பெருக்கியில் பிரச்சாரம் செய்பவர் கொஞ்சம் சுருதி மாற்றி நம் தலைவர் பக்கத்து ஊரில் பேசிக்கொண்டிருப்பதாக தகவல் வந்துள்ளது எனவே இன்னும் பத்து மணித்துளிகளில் வந்துவிடுவார். என்று சொல்லியே ஐந்து மணி நேரம் மக்களை காக்க வைத்து அவர்களின் உணர்வை தூண்டிவிடுவது என்பது ஒரு யுத்தி.
இந்த யுத்தியைத் தான் பாரதி கையாண்டான். “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” அதைக்கேட்டு மக்கள் கூடத் தெடங்கினார்கள். “என்ன ஐயரே சொல்கிறீர்ää சுதந்திரம் வாங்கிவிட்டோமா” என்று கேட்க்கத் தொடங்கினார்கள். உடனே அருகிலே நின்று கொண்டிருந்த சிறுவனிடம் பறையை வாங்கித் தன் தோளிலே மாட்டிக் கொண்டுää
“பார்ப்பனை ஐயரென்ற காலமும் போச்சே – வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே – பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
ஏய்ப்போர்க்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே
ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே;
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று”
ஆனந்தக் களியாட்டம் ஆடினான். மக்கள் மொழியிலே பேசினான். இதைக்கேட்டு அந்த மக்கள் எழுச்சியுற்றார்கள்.
அதுமட்டுமல்ல சுவாமி விவேகானந்தர் சொன்னதைப்போல “பெண்மை எங்கு பூஜிக்கப்படுகிறதோ அங்கு முன்னேற்றம் இருக்கும்” அந்தக் கருத்தின் அடிப்படையில்தான் சுவாமி விவேகானந்தரின் சகோதரி நிவேதிதாவை சந்தித்ததற்க்குப் பின்னால் தான் பாரதி பெண் விடுதலைபற்றிää பெண்கல்வி பற்றி தீவிரம் காட்டியதோடு மாத்திரம்மல்லாமல்ää முதன் முதலில் கூக்குரல் கொடுத்தவன்ää பெண்களை சக்தியின் வடிவமாகப் பாhர்த்தவன் பாரதி.
“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”
என்று கூறி பெண்களுக்கு சர்வ சுதந்திரத்தை வழங்கியவன் பாரதி தான். அதோடு நின்றுவிடவில்லைää
“கும்மி யடிதமிழ் நாடு முழுதுங்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி”
என்று தமிழ்நாடு முழுதும் பெண்களுக்கு எழுச்சியை ஊட்டினான்.
பாரதி என்ற அந்த மகத்தான மாமனிதர் வெறும் முப்பத்தி எட்டரை ஆண்டுகாலம் மட்டுமே வாழ்ந்திருந்தாலும்ää அவன் அன்றைக்கு குடுகுடுப்பைக்காரனாக வந்து சொன்ன வாக்கு இன்றைக்குப் பலித்துவிட்டது.
எனவேää பாரதி..! மீண்டும் இந்த மண்ணில் பிறப்பெடுத்துத்து வா! உன்னை யார்யார் அன்றைக்கு அங்கீகரிக்க மறுத்தார்களோää அவர்களெல்லாம் உன்னை உச்சி முகர்ந்து வரவேற்க காத்திருக்கிறார்கள். நீ யாரையெல்லாம் உயர்த்திப்;பார்க்க ஆசைப்பட்டாயோ அவர்களெல்லாம் இன்றைக்கு உயர்ந்த நிலையில் இருக்கின்றார்கள். நீ அன்றைக்கு பராசக்தியிடம் காணி நிலம் கேட்டாய். அவள் தரவில்லை..
ஆனால் உன்னால் உரமூட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் இந்த நாட்டையே உன் காலடியில் சமர்ப்பிக்க காத்திருக்கிறோம். வா பாரதி.. வா… ஏன் பாரதி வரமுடியாது என்று தலையசைக்கிறாய்? என்ன வருத்தம்? சிங்களத்தீவினுக்கோர் தீவினுக்கோர் பாலம் அமைக்கவில்லை என்று வருத்தமா? என் செய்வேன் பாரதி.. இலங்கையில் நமக்காக குரல் கொடுக்க இருந்தவர்(கள்) மாண்டுவிட்டார்(கள்). அங்கு தலைமைப்பீடத்தில் இராஜபக்சே இருக்கிறார் ஒத்துக்கொள்ள மாட்டார்.
அடுத்து சேதுவை மேடுறுத்தி வீதி சமைக்க வில்லை என்ற கோபமா? அந்ததிட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுää சமுத்திரத்தில் இறங்கினோம். அங்கு ராமர் கட்டிய பாலம் இருப்பது தெரிந்து அதை இடிக்க வேண்டாம் என்று அந்த வேலையை அப்படியே நிறுத்திவிட்டோம். அடுத்து என்ன பாரதி? ஓ…. தேசிய நதிகளை இணைக்கவில்லையே என்ற வருத்தமா? அய்யோ நாங்கள் என்ன செய்வது பாரதி? இதை அண்டை மாநிலமான கேரளாவும் கர்நாடகாவுமே ஏற்றுக்கொள்ளாதே? தற்போது முல்லை பெரியாறு பிரச்சனை விசுவரூபம் எடுத்து வருகிறதே. என் செய்வேன் பாரதி? நீ வந்தால் தான் இந்த மூன்று பிரச்சனைக்கும் தீர்வு காணமுடியும். வரும் போது வாஞ்சிää பகத்சிங்ää வ.உ.சிää திலகர்ää விவேகானந்தர்ää நிவேதிதாää நேதாஜிää பெரியார் இவர்களையெல்லாம் கையோடு அழைத்து வா.
அஹிம்சை தலைவர்கள்ää நாங்களும் வருகிறேன் என்றால் அவர்களுக்கு ஆறுதல் கூறி அங்கேயே விட்டுவா. வரும்போது எலிப்பொறியும் எடுத்துவா. ஏனெனில்ää நாட்டில் உழைப்பவன் சேமித்த பொருளையெல்லாம் திருடித்தின்று கொழுத்தழையும் பெருச்சாலிகளை பிடித்திடத்திட்டால் நாமெல்லாம் ஒன்றிணைந்து மறுசுழற்சியாலேää மறுமலர்ச்சி செய்திடலாம். உன் மொழியில் கூற வேண்டுமானால் பாலித்திடலாம்.
(கட்டுரையாளர் , சொற்பொழிவாளர்)
உறையூர் , திருச்சி -3