பஸ் படிக்கட்டு பயணம் - இரண்டு தடவை பயணம் செய்தால் பள்ளி - கல்லூரியில் இருந்து நீக்கம்..? ஐகோர்ட் உத்தரவு..! மாணவர்களுக்கு இனிப்பான செய்தியா..?
பஸ் படிக்கட்டு பயணம் - இரண்டு தடவை பயணம் செய்தால் பள்ளி - கல்லூரியில் இருந்து நீக்கம்..? ஐகோர்ட் உத்தரவு..! மாணவர்களுக்கு இனிப்பான செய்தியா..?
சமீபத்தில் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்ஸில் பயணம் செய்த படிக்கட்டில் பயணம் செய்த மனோஜ், சேகர், விஜயன் மற்றும் பாலமுருகன் ஆகிய நான்கு பேரும் உயிர் இழந்தனர் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துயர சம்பவத்தை தானாகவே முன்வந்து ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்துள்ளது. அந்த விசாரணையில் தான் இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர்.
சமீபத்தில், பள்ளிக்கூட வேனில் இருந்த ஓட்டை வழியாக சிறு குழந்தை ஓடும் வேனில் இருந்து விழுந்து உயிரை விட்டது, இதற்குப் பிறகு அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்ததைப் போல இந்த படிக்கட்டு மரண சம்பவத்திற்கு என்ன செய்யப் போகிறது என்றார்கள். அதற்கு அரசு தரப்பு பதில் இவ்வாறு இருந்தது. கடந்த 2009 - ஆம் ஆண்டு பஸ் விபத்தில் 138 பேர் இறந்துள்ளனர். 2012 - ம ஆண்டில் 109 ஆக குறைந்துள்ளது என்றது. நீதிபதிகள் இது ஏன் பூஜ்யமாக இருக்கக் கூடாது என்றார்கள்.
பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால், அந்த பஸ்ஸை சாலை ஒரம் ஒதுக்கி ஒரு இரண்டு மணி நேரம் நிறுத்தி விட்டு பிறகு பஸ்ஸை எடுங்கள் என்றார் ஒரு நீதிபதி.
ஒ.எம்.ஆர்.சாலையில் இருந்து 8 லிருந்து 9 மணிக்குள் சுமார் 95 பஸ்கள் இயக்கப்படுகின்றன என்றார்கள் அரசு தரப்பிலிருந்து. மூன்று கல்லூரிகள் இருக்கும் பகுதிக்கு ஒரு பஸ் தான் விடப்படுகிறது அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்றதற்கு,
அணைத்து பஸ் நிலையங்கள், கல்லூரிகள்,பள்ளிக்கூடங்கள் அருகே டிஜிட்டல் போர்டுகளை அமைத்து,பஸ்களின் படிக்கட்டுகளில் யாரும் பயணம் செய்யக்கூடாது,என்ற வாசகத்தை ஆலோசனையாக ஒளிப்பரப்ப இருக்கிறோம்.
படிக்கட்டு பயணத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து துண்டு பிரசுரங்களை பள்ளிகள், கல்லூரிகளிலும், பொது இடங்களிலும் விநியோகம் செய்ய இருக்கிறோம்.
பத்திரிக்கைகள்,டி.வி.கள்,.எப்.எம். ரேடியோ ஆகியவற்றின் மூலமாகவும் படிக்கட்டு பயணம் குறித்து எச்சரிக்கை உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் மாணவர்கள் வசிக்காக சிறப்பு பஸ்கள் விடப்படும்.
போக்குவரத்து போலீசார் உதவியுடன் போக்குவரத்து உதவிகள்,பாதுகாப்பு விதிகள் மிகவும் கண்டிப்புடன் அமல்படுத்தப்படும்.
படிக்கட்டு பயணத்தை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள்,மாணவர் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து பஸ்ஸின் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்களின் பெற்றோரிடமும், அவர் படிக்கும் கல்வி
நிறுவனத்திலும் புகார் செய்யப்படும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வின் மூலம் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுவதை தவிர்ப்பதற்கான ஆலோசனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்றுவதற்காகவும் இன்று (12&ந் தேதி) சென்னை போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர், இணை கமிஷனர் ஆகியோருடன் கூட்டம் நடத்த இருப்பதாக அரசின் முதன்மைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேற்கூறப்பட்ட நடவடிக்கைகள் மூலம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுவது மட்டுமல்லாமல், படிக்கட்டு பயணமும் பெருமளவில் தவிர்க்கப்பட்டுவிடும்.
படிக்கட்டு பயணம் குறித்த எச்சரிக்கை, பத்திரிகைகள், டி.வி.கள் மூலமாக மக்களிடத்தில் பிரபலப்படுத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் மீது எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கைகள் பற்றி அவர்களின் பெற்றோருக்கும் தகவல் அளிக்க வேண்டும்.
இன்றிலிருந்தே (12&ந் தேதி) இந்த நடவடிக்கைகளை போலீஸ் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
இந்த நடவடிக்கைகளுடன் சேர்க்க வேண்டிய மற்றொரு நடவடிக்கையையும் நாங்கள் முன்மொழிகிறோம். மாணவர் யாராவது பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்தால் அதுபற்றி அந்த மாணவரின் பெற்றோருக்கு மட்டுமல்ல, கல்வி நிறுவனத்தின் முதல்வரிடத்திலும் புகார் செய்யப்பட வேண்டும்.
அதோடு, அந்த மாணவன் இரண்டு அல்லது மூன்றாம் முறையும் பஸ்சின் படிக்கட்டில் நின்றபடி பயணித்தால், பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு, அந்த மாணவனை கல்வி நிறுவனத்தில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த நடவடிக்கையையும் பாதுகாப்பு திட்டத்தில் அரசு இணைத்து கொள்ள வேண்டும்.இந்த நடவடிக்கைகளை அமல்படுத்திய பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்த அறிக்கையை, ஜனவரி 2&ந் தேதி அரசு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவைதான் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உள்ள நீதிபதிகள் கூறிய ஆலோசனைகள் அல்லது அறிவுரை அல்லது உத்தரவு அல்லது வழிகாட்டல் என்று கருதலாம்.
நமக்கு வரும் சந்தேகம் எல்லாம் பின்வருமாறு உள்ளன..!?
ஓட்டை விழுந்த சிறுவர்களின் வேனும், பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களும் ஒன்றா..?
இரண்டு முறை படிக்கட்டில் பயணம் செய்தால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து நீக்கலாம் எனபது சரியா..?
படிக்கட்டில் பயணம் செய்தால் வழக்கு அதுவும் கடுமையான குற்ற நடவடிக்கை தேவையா..?
எத்துனை பஸ்கள், பள்ளி மாணவர்கள்,
மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ செல்வங்களின் இலவச பாஸ்கள் உடையவர்களை ஏற்றிச் செல்கின்றன.? காலை நேரத்தில் செல்லும் அணைத்து பஸ்களிலும் இலவச பஸ் பாஸ்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா..?
ஒ.எம்.ஆர்.சாலை வழியே காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை செல்லும் 95 பேரூந்துகள் எனபது, குறுக்கு கோடு போட்ட பஸ் எத்துனை..? பாயிண்டு டு பாயிண்டு எத்துனை..? குளிர் வசதி கொண்ட பஸ்கள் எத்துனை..? இன்னும் பல கட்டுப்பாடுகள் உடைய பஸ்கள் எத்துனை..? இவை எல்லாவற்றையும் சேர்த்து கணக்கு சொல்லியிருந்தால் இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா..?
பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் படிக்கட்டில் ஏன் பயணம் செய்கிறார்கள்..? புளி மூட்டையைப் போல் பயணிகளை ஏற்றினால், பிறகு எதில் போவார்கள்..? பஸ் கூரை மீதும் போக வேண்டும் என்று சொல்கிறார்களா..?
கருத்துகள் சொல்லும் நீதிபதிகள் அவர்களை விட்டு விடுவோம்..போக்குவரத்து உயர் அதிகாரிகள் என்றாவது இந்த நேரங்களில் பஸ் பயணம் செய்தது உண்டா..?
ஒரே மாதிரியான பஸ் கட்டணம் இருக்கிறதா சென்னையில்..? அணைத்து பஸ்களிலும்..! இல்லை என்றால் ஏன்..?
காலை மற்றும் மாலை நேரங்களில் ஏன் கல்லூரிகள் பள்ளிகள் என்று சிறப்பு பஸ்கள் இயக்கவில்லை..?
கடந்த ஒரு வருடமாக அல்ல பல வருடங்களாக மின்சாரம் இல்லாத பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் இவ்வளவு சிரமம் ஏற்பட்டு இருக்கும் காரணத்தை ஏன் கருத்தில் கொள்ளவில்லை..?
கடைசி நேரத்தில் தான் மாணவர்கள் பஸ்களில் வருகிறார்கள் என்று கூறுவது அநியாயம் அக்கிரமம் இல்லையா..?
இருட்டு அதுவும் கும்மிருட்டு அதன் மூலம் டெங்கு மற்றும் விசக் காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் என்று கொசுப்பன்னையை வளர்த்து வரும் நிலையில்,சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் இதனால், இந்த நீதிபதிகளின் வழிகாட்டுதலால் பாதிக்கப்பட மாட்டார்களா..?
ஒருவேளை நீதி அரசர்கள் சென்னைக்குத் தான் இந்த நீதி என்று சொல்ல வருகிறார்களா என்ன..?
பல நாடுகளில் நீண்டு நிலைத்து நிற்கும் ஆல்ப்ஸ் மலை முகடுகளில் இருக்கிறார்களா நமது நீதிமான்களும்..! அரசின் ஆட்சியாளர்களும்..?
நீதி மன்றங்களில் நிலைத்து நிற்கிறதா..? உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பட்டம்..! ஐரோப்பியா கூட வேண்டாம்..அமேரிக்கா கூட வேண்டாம்..அய்யா..! சீனா கூட வேண்டாம்..!
அதி உயர் பதவிகளில் உள்ள இந்திய ஆட்சியாளர்கள் கக்கூசு இல்லாத நாடு தான் நமது நாடு என்று புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை..! என்று கருதலாமா..?
இதில் தற்பொழுது மாணவர்கள் மீது தனது சவுக்கை வீசிகிறது என்று கருதலாமா..? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!
சங்கிலிக்கருப்பு