குட்டியானை !

தேசிய நெடுஞ்சாலை... சாஸ்திராவிலிருந்து தஞ்சை நோக்கி செல்லும் போது...இரண்டாவது மேம்பாலத்தின் முகட்டருகே...ஒரு குட்டி யானையின் ஓட்டுனர் அக்குட்டியானையை பூனைபோல் சுற்றிவந்துகொண்டிருந்தார் ! சரியாக தீனிபோடவில்லை போலும்...கடந்து வந்த என்னை ஏதோ ஓன்று பின்னோக்கி இழுக்க...அருகில் போய் நின்ற மறுநொடி...சூழ்நிலை உணர்ந்துகொண்டேன் ! சரி வாருங்கள்...தீனி வாங்கி வருவோம் என அழைத்த என்னை நம்பி ஏறி உட்கார்ந்த சில நொடிகளில் அவர் ஒருசில கேள்விகள் அடுக்கினார் ...உங்க பேரு ? ஊரு ? எங்க வேலை பாக்குறீங்க ? "சந்தேகம்" ! தீனி வாங்கியபின்...தொலைவை மனதில் கொண்டு நகர்ந்து போக முடியாமல்...நின்று கொண்டிருந்தேன்...! நீங்க கிளம்புங்க தம்பி...என்றவரிடம் உட்காருமாறு சைகை செய்தேன் ! மறுபடி குட்டியானை நோக்கி நகர்ந்தோம்...இறக்கிவிட்ட போது..."நல்லாருங்க தம்பி" என்றார்...பதிலாய் புன்னகை மட்டும் உதிர்த்துவிட்டு வந்தேன் ! உதவி பண்ணிட்டாராமாம் என்ற உங்களின் யோசனைகளை கேட்கிறது...மேற்கண்ட நிகழ்விலிருந்து நான் புரிந்துகொண்ட ஓன்று...இக்காலத்தில் மனிதன் எதையும், எவனையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறான்...சில சமயங்களில் அவசியமெனினும்....சற்றே வலிக்கவும் செய்கிறது !

எழுதியவர் : வினோதன் (13-Dec-12, 10:57 pm)
பார்வை : 114

சிறந்த கட்டுரைகள்

மேலே