ஜோடிப் பொருத்தம்

நீ என்னோடு இருக்கும் பொழுதுகளில்
பட்டாம்பூச்சிகளோடு கூட்டுசேர்ந்து
பூக்களில் தேனுறிஞ்சிக் குடிக்கிறேன்

வெள்ளாட்டுக் குட்டியொன்றை
மார்போடு அணைத்துப்
புரியாத பாஷையொன்றைப்
பேசி நடக்கிறேன்

வயல்வரப்புகளில் உன் கைபிடித்தவாறே
அடிப்பிரதட்சனம் செய்ய முயல்கிறேன்

சில மழைத்துளிகளை ஏந்தி
அருந்துவதாக எண்ணி
மார்புக்குள் விட்டுக்கொள்கிறேன்

நட்சத்திரங்களை எண்ணிவிட்ட
அயர்ச்சியில் கண்ணுறங்கிப் போகிறேன்

பக்கத்தில் நீயிருக்க
மற்றதையெல்லாம் ரசிக்கும்
நான் ஒரு பைத்தியக்காரி..

மற்றதெல்லாம் பக்கமிருக்க
என்னை மட்டுமே ரசிக்கும்
நீ ஒரு பைத்தியக்காரன்…

எழுதியவர் : சுபத்ரா (14-Dec-12, 2:11 pm)
சேர்த்தது : சுபத்ரா
பார்வை : 175

மேலே